அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் தர்பியா(ஒழுக்க பயிற்சி) நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-10-2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தர்பியா என்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி நிகழ்ச்சியில் சகோ: "மக்தூம்" அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி சுமார் 9.45 மணிக்கு துவங்கப்பட்டு 1.30 மணிவரை நடைபெற்றது. இதில் பெண்கள் பகுதியில் சகோதரி: "யாஸ்மின்" ஆலிமா அவர்கள் உழு முறைகள், தொழுகை முறைகள், துஆக்கள் மனனம் போன்ற ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.

ஆண்கள் பகுதியில் சகோ: "மக்தூம்" அவர்கள் ஒழுக்கப் பயிற்சியை கற்றுக்கொடுத்தார்.இதில் சுமார் 90க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...