கப்ருஸ்தானை அழிக்கும் காசு ஆசை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) தங்கத்தால் ஆன ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனது வாயை (கப்ரில் போடப்படும்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும் (இந்தப் பேராசையிலிருந்து) திருந்தி மன்னிப்பு கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் பின்  மாலிக்(ரலி) நூல்: புகாரி 6439

பணத்தின் மீது கொண்ட பேராசைக்கு மண் தான் இறுதி எல்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் மனிதனின் இந்தக் காசாசை அந்த மண்ணையும், அதாவது கப்ரு ஸ்தானையும் அழிக்கும் அளவுக்கு வந்து விட்டது.

வருவாய் பெருக்குகின்றோம் என்ற பெயரில் ஜமாஅத் நிர்வாகத்தினர்

வருவாய் பெருக்குகின்றோம் என்ற பெயரில் ஜமாஅத் நிர்வாகத்தினர் பொது மையவாடிகளை அழித்து வணிக மைய வாடிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் பள்ளிவாசல்களில் கப்ருஸ்தான்களை அழித்து, கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடும் போக்கு அதிகரித்து வருகின்றது.

சுனாமி வந்த பிறகும் இந்த ஜமாஅத்தார்கள் சுதாரித்துப் பாடம் பெறவில்லை. பொதுவாகவே பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, கொள்ளை நோய் போன்ற இயற்கைப் பேரழிவுகளாலும், போர்கள் போன்ற செயற்கைப் பேரழிவுகளாலும் மனித வாழ்வு முற்றுகையிடப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சோதனையான கால கட்டங்களில் இறந்த மனித உடல்களை மொத்தம் மொத்தமாக அடக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வராது என்று யாராலும் சொல்ல முடியாது.

''ஆண்டியும் இங்கே அரசனும் இங்கே'' எனும் அளவுக்கு சமரசம் உலாவும் பொது கப்ருஸ்தான்களில் பெரும் புள்ளிகளின் கப்ருகள் மட்டும் கற்கள் பதிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ளன.

இது போக அவ்லியாக்கள், ஷைகுகள், மகான்கள் என்ற பெயரில் அவர்களது கப்ருகள் பொது மைய வாடியிலேயே தர்ஹாக்களாக ஆக்கப் பட்டுள்ளன. இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பொது மையவாடிகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜமாஅத்தார்கள் வருவாய் என்ற பெயரில் மைய வாடிகளை, வணிக மைய வாடிகளாக மாற்றி வருவது நம்மில் இறப்பவர்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமையைப் பறிக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

இருப்பவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிக்கும் அநியாயச் செயலைக் கண்டு மக்கள் நொந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்தவர்களின் ஆறடி நிலத்தையும் ஆக்கிரமித்து, அபகரித்துக் காசு தேடுவது கடைந்தெடுத்த கயமைத் தனமும் காசு வெறியுமாகும்.

இப்போதுள்ள சட்டப்படி ஊருக்குள் எங்கேயும் மையவாடி அமைக்க முடியாது. ஊருக்கு வெளியே தான் மையவாடி அமைக்க முடியும். இத்தகைய இடங்களில் இனி கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு நிலத்தின் விலை வானத்தின் எல்லை தொட்டு நிற்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாயப் பொது மக்கள் இனி இதைக் கண்டு பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

அதிலும் குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள் போன்ற சோதனைக் காலங்களில் மொத்தப் புதையலுக்கு இது பெருத்த ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்த அபாயத்தை ஒரு போதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

ஊருக்கு மத்தியில் மையவாடி அமைந்திருப்பது உண்மையில் ஒரு பாக்கியமே! இந்தப் பாக்கியத்தை பொருளாதாரப் பேராசைக்குப் ப­யாக்கவும் நம்முடைய கடைசி இடமான கப்ருஸ்தானைக் காசாக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம் என்று சபதம் ஏற்போமாக!இந்தச் சவாலை சட்ட ரீதியாக சந்திப்போமாக!

பொறுத்தது போதும்! பொங்கி எழுங்கள். உங்கள் புதை குழிகளைக் காப்பதற்குப் போர்க் குரல் கொடுங்கள்.

Post a Comment

0 Comments