இளைஞர்களின் கணவு படிப்பு – MBA என்றால் என்ன??


இன்றைக்கு பொறியியல் படிக்கும்மாணவர்களாக இருந்தாலும் சரி கலை,வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்தமாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள்அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கணவுமேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA)என்பதாகும்.

இதற்க்கு சாண்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் MBA படிப்புகளுக்கான கல்விநிறுவணங்கள் உள்ளது. மருத்துவர் , என்சினியர் வழக்கறிஞர் என்றவரிசையில் ஏன் அதற்க்கும் மேலாக மதிப்பும் மரியாதையும் கொண்டதுறையாக இது வளர்ச்சி பெற்று இருக்கின்றது

உங்களிடம் MBA படிக்கும் ஆசை இருந்தால் அதை நினைவாக்கும் வகையில்அந்த படிப்பை பற்றி உங்களுக்கு விளங்க செய்வதே இதன் நோக்கம்......... READ MORE..........


இன்றைக்கு பொறியியல் படிக்கும்மாணவர்களாக இருந்தாலும் சரி கலை,வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்தமாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள்அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கணவுமேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA)என்பதாகும்.

இதற்க்கு சாண்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் MBA படிப்புகளுக்கான கல்விநிறுவணங்கள் உள்ளது. மருத்துவர் , என்சினியர் வழக்கறிஞர் என்றவரிசையில் ஏன் அதற்க்கும் மேலாக மதிப்பும் மரியாதையும் கொண்டதுறையாக இது வளர்ச்சி பெற்று இருக்கின்றது

உங்களிடம் MBA படிக்கும் ஆசை இருந்தால் அதை நினைவாக்கும் வகையில்அந்த படிப்பை பற்றி உங்களுக்கு விளங்க செய்வதே இதன் நோக்கம்.........

உங்கள் ஊரில் அப்துல் காதர் என்பவர்ஒரு சாதாரன உணவகம் வைத்து நடத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்அந்த கடையில் அன்றாடம்என்ன நடக்கின்றது என்று பார்த்தாலே போதும் MBA என்றால் என்ன என்பதைநாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அந்த கடையை கவணிக்கும் நபர் அதிகாலையில் உணவகத்திற்க்காக பால்பூத்தில் பால் வாங்குகிறார் பிறகு மளிகை கடைக்கு சென்று டீ தூள் சர்க்கரைஉணவு செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிவருகிறார்நாள் முழுவதும் வியாபாரம் நடக்கின்றதுஇரவு உணவகத்தைமூடும் முன் அவர் வரவு செலவு கணக்கு பார்க்கிறார்.

அப்துல் காதர் எதற்க்காக இந்த உணவகத்தை வைத்து வியாபாரம் செய்கிறார் ?பால்டீ தூள் மற்றும் உணவகத்திற்க்கு தேவையான அனைத்துபொருட்களையும் வாங்ககடையில் உள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்கமற்றும் அவரின் செலவுக்காக இந்த வியாபாரத்தை செய்கிறார்இந்தசெலவுகள் எல்லாவற்றிக்கும் அதிகம் பணம் தேவைஅவர் உழைப்பது இந்தலாபத்துக்காக தான்.

இது தான் பிசினஸ்அதாவது வியாபாரம்இதை தவிர்த்து பலவியாபாரங்களும் உள்ளனசோப்பு , சீப்புமளிகை சாமாணகள் காய்கறிபழம்,செல்போன்டி.விபிரிஜ்ஏர்கண்டிசனர்லேப்டாப் கம்பியூட்டர்,மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் என்று பல கடைகளில்விற்க்கபடுகின்றதுஇதுவும் வியாபாரம் தான்.

இது மட்டும் தான் வியாபாரமா ?? இல்லை இல்லைஉதாரணமாக நீங்கள்படிக்கும் கல்வி கூடங்களை எடுத்துக் கொள்ளலாம்இங்கேயும் பணம்கொடுக்கிறீர்கள்என்ன பொருள் வாங்குகிறீர்கள் ?? படிப்புஅறிவு இது ஒருபொருள் இல்லையே ?

அதே போல் நாம் மருத்துவமனைக்கு செல்கின்றோம் அங்கு நமக்குமருத்துவர்களால் மருத்துவம் செய்யப்படுகின்றதுஅதற்க்காக நாம்மருத்துவரிடம் பணம் கொடுக்கின்றோம்.

ருத்துவமனையாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் இங்கேவிற்க்கபடுவது என்ன ?? ஒரு பொருளை இல்லை ஆனால் ஒரு சேவையை.

ஆம் வியாபாரம் என்பது லாபம் இட்டும் நோக்கத்தில் பொருளையோ அல்லது சேவையையோ விற்ப்பது.

பிசினஸ் மேனெஜ்மெண்ட் என்றால் என்ன ? வியாபார நிர்வாகம்ஒருநிர்வாகத்தின் பல செயல்களையும் ஒருங்கிணைந்து லாபம் ஈட்டுவது தான்பிசினஸ் மேனெஜ்மெண்ட் என்பதாகும்.

வியாபார நிர்வாகத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றன ? இப்போது அப்துல்காதர் செய்யும் வியாபாரத்தை பார்ப்போம்.

உணவு செய்வதற்க்கு டீ தூள்பால்அரிசிஎண்ணைசமயல் எரிவாயு மற்றும்மளிகை பொருட்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் போடுகிறாரே அதுதான் Inventory Control.

அவற்றை அனைத்தையும் வாங்குவது தான் பர்ச்சேஸ் மேனெஜ்மெண்ட்(Purchase Management).

உணவுகள் தயாரிப்பது புரொடக் ஷன்(Production)

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தரமாண உணவு தயாரித்துவாடிக்கையாளர்களை திருப்திபடுதுவது விற்ப்பனை.(Marketing)

அப்துல் காதர் உணவகம் என்று போர்டு வைத்திருக்கிறாரே அது விளம்பரம்.(Advertising)

கடையில் அமர்ந்து கல்லாவை நிர்வகிப்பதுவரவு செலவுக் கணக்குப் பார்ப்பதுநிதி நிர்வாகம்.(Finance Management)

டையில் வேலை செய்யும் வேலையாட்கள் ஒழுங்காக வேலைசெய்கின்றார்களா என்று அப்துல் காதர் கவனிக்கின்றார்களே இது ஊழியர்நிர்வாகம்.(Personnel Management)

வேலை செய்வதற்க்கு எத்தனை ஆட்கள் தேவை என்று கணக்கு போடுவதுதான் மனித வள நிர்வாகம்.(Human Resource Management)

அத்தனை வேலைகளும் சரியாக நடந்து கொண்டு இருக்கிறதா என்று அப்துல்காதர் கவணித்துக் கொண்டு இருக்கிறாரே அது தான் பொது நிர்வாகம்.(Genaral Management)

இவை அனைத்தையும் ஒருங்கினைந்து லாபம் வர வைக்கிறாரேஇது தான்பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்அதை பற்றி மிகவும் விரிவாக படிப்பது தான்MBA என்று கூறப்படும் Master of Bussiness Administration.

நாம் இங்கு உங்களுக்கு கூறி இருப்பது சாதாரன ஒரு உணவகத்தில் நடக்கும்வியாபாரத்தை பற்றிஇதே போல் ஒரு பண்னாட்டு நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் இந்த உணவகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பெரியஅளவில் நடக்கும்.

ஒரு நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த நினைத்தால் நிர்வாகத்தின் எல்லாநடவடிக்கைகளையும் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும்அதாவது.

  •          ஊழியர் நிர்வாகம்(Personnel Management)
  •          விற்பனை நிர்வாகம்(Marketing Management)
  •          மனித வள நிர்வாகம்(Human Resource Management)
  •          உற்ப்பத்தி நிர்வாகம்(Production Management)
  •          நிதி நிர்வாகம்(Finance Management)
  •  கம்ப்யூட்டர்தகவல் தொடர்பு நிர்வாகம் (Computer & Information Systems    Management)

இவை அனைத்தையும் ஒருங்கினைந்து படிப்பது தான் MBA. இதை தாம் MBAவில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

இவை அனைத்தும் MBA வை பொருத்தவரை ஒரு ஒரு கடல் இதைமேலோட்டமாக தான் நாம் இங்கு பார்த்து இருக்கின்றோம். MBA வில் உள்ள பலதுறைகளான Human Resource Management, Supply Chain Management, Financial Management, Logistics & Shipping Management, Import & Export Management, Hotel Management, Airport Management etc போண்றவைகளில் மிகவும் விரிவாக இந்த 6நிர்வாகத்தை பற்றி தான் படிக்க வேண்டும்.

சுறுக்கமாக சொல்ல போணால் இது தான் MBA என்று சொல்லப்படும் Master of Business Administration.

Post a Comment

0 Comments