70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!

இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.
ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.
இந்த நிலையில் ஹஜ் என்பது....





இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.
ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.
இந்த நிலையில் ஹஜ் என்பது மகிழ்ச்சிகரமான விசயமாக இருந்தாலும், பயணம் செய்வதை அதுவும் இந்த முதிய வயதில் பயணம் செய்வதை சுமையாகக் கருதிய 70 வயதிற்கும் மேற்ப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய செய்தியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை மையமாக வைத்து தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.
70 வயதுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் அவருடன் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்லவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் , அதன்படி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, 70 வயது பூர்த்தியாகிய ஒருவர் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் போது, அவரோடு ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்காக ஏற்கனவே விண்ணப்பங்களை அளித்துள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட பயணிகள், அவர் தன்னுடன் பயணியாக யாரை அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார் என்பதை தெரிவித்தால் மட்டுமே அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்து தற்போது விண்ணப்பிக்க விரும்பினால் , தங்களது விண்ணப்பத்துடன்,அவர் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு கடவுச்சீட்டு ( International Passport) வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் மற்றும் அவருக்கு உதவியாகச் செல்லும் பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும்.
ஒருவேளை ஹஜ் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும் சக பயணிகள் மட்டும் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள்.
இதற்கான விண்ணப்பங்கள் www.hajcommittee.com என்ற முகவரியில் கிடைக்கின்றன.
முக்கியக் குறிப்பு: பெண்கள் பலர் தங்களுக்கு பொருப்பாளர்களாக அந்நிய ஆண்களை அழைத்துச் செல்வதற்கு மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை. பெண்களின் பொருப்பாளர்கள் கணவன் மார்களாக அல்லது மகரம் உள்ள ஆண்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது மார்க்கத் தீர்ப்பு.
பெண்கள் யாரை துணைக்கு அழைத்துக் செல்லலாம் என்பது குறித்து அறிய
http://onlinepj.com/kelvi_pathil/haj_kelvi/thakka_thunai_illaamal/

Post a Comment

0 Comments