இதழ்களின் அவசியம்!

கத்துவத்தின் உயிர் மூச்சு தாவா பணிதான் என சேலம் மாநில பொதுக்குழுவில் மாநில்த தலைவர் அறிவித்ததன் அடிப்படையில், கடந்த 29:11 இதழில் வழிகாட்டுகின்றது தூத்துக்குடி என்ற தலைப்பில் 3 கிளைகளில் 105 சந்தாக்கள் (உணர்வு, ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி) பிடித்து சாதனை படைத்ததைக் குறிப்பிட்டு இருந்தோம்.

தற்பொழுது மதுரை மாவட்டம் கரீம்ஷா பள்ளி முனிசாலை கிளையின் சார்பாக அதிரடி நடவடிக்கையாக ரூ.100க்குரிய சந்தாத் தொகையை ரூ.50 ஆகக் குறைத்து, முனிச்சாலை கிளை மட்டும் 137 சந்தாக்கள் பிடித்து சாதனை படைத்துள்ளது.  இதனால் ஏற்படும் இழப்பை கிளை நிர்வாகமே ஏற்று, தாவா பணி மென் மேலும் வளர்ச்சியடைய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொள்ளவதற்கு நமது ஜமாஅத் பல வழிகளிலும் தாவா செய்து வந்தாலும், இதழ்கள் மூலம் செய்யும் தாவா பணி மற்ற பணிகளை மிஞ்சும் அளவிற்கு மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்தே!

இன்னும் முயற்சி செய்தால் இதனைவிடப் பன்மடங்கு சந்தாக்கள் சேகரித்து தாவாவை ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லலாம்.  மற்ற மாவட்டங்கள் மற்றும் கிளைகள் இன்னும் வீரியமாக செயல்பட்டு சாதனை படைக்கவேண்டும். இன்ஷாஅல்லாஹ்!

இதன் மூலம் இதழ்களின் அவசியம் தாவாவிற்கு எந்தளவிற்கு முக்கியம் என்பதை உணர்ந்துயுள்ளோம் ஆகையால் நாமும் சந்தா சேர்ந்து பிற சகோதர்களிடம் எடுத்து சொல்லி இந்த இதழ்களுக்கு சந்தாவை சேர்போமா???

 உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி ஆகிய இதழ்கள் உங்களுக்கு கிடைக்க  அனுப்ப, அணுக  வேண்டிய முகவரி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தெற்கு தெரு ,
கீழக்கரை.
ராமநாதபுரம் மாவட்டம் 
தொடர்ப்புக்கு :+917200225205

நன்றி: உணர்வு

Post a Comment

0 Comments