அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள்

உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிர்கால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .
உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை.
மருத்துவம்(MBBS, BDS) , பொறியியல் (B.EB.Tech)அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும் வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை, அரசின் மானியத்துடன் , வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை கொடுக்கலாம்.
தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துகுடி, திருச்சி, பெரியகுளம், மேட்டுபாளையம் ஆகிய 6 இடங்களில் 11 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இதில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள் பயிற்றுவிக்கபப்டுகின்றன.
4 ஆண்டு அறிவியல் படிப்புகள் : B.Sc.(Agriculture, Horticulture, Forestry, Home Science, Agricultural Engineering)
4 ஆண்டு பொறியியல் படிப்புகள் : B.Tech.(Biotechnology) , B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering) ,B.Tech.(Energy and Environmental Engineering) , B.Tech.(Bioinformatics) , B.S.(Agribusiness management ) ,B.Tech.(Agricultural information technology) .
மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் 11 வேளாண்பல்கலை கழகங்களிலும் மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்க படுகின்றன இன்ஷா அல்லாஹ். விண்ணப்பத்தின் விலை ரூ.600. மே மாதம் கடைசி வாரத்திற்க்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :
Agricultural College and Research Institute, Coimbatore – 641 003
Agricultural College and Research Institute, Madurai – 625 104.
Agrl. College and Res. Inst., Killikulam, Tuticorin District- 628 252
Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Navalur Kuttappattu, Trichy – 620 009.
Agricultural Engineering College and Research Institute, Kumulur, Pallapuram (P.O.), Poovalur (Via),Trichy – 621 712
Horticultural College and Research Inst., Periyakulam – 625 604
Forest College and Research Institute, Mettupalayam – 641 301
தகுதிகள் : +2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல், அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்
மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை : மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
அனைத்து விபரங்களும் www.tnau.ac.in இந்த உள்ளது.
S.சித்தீக்.M.Tech

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...