அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பகவானுக்கு உடல் நலமில்லை!


இந்துக்களால் பகவான் என்றழைக்கப்படும் புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு உடல் நலமில்லை என்ற செய்திகள் வந்துள்ளன.
 
கடந்த 28 மார்ச் அன்று இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறப்பு டாக்டர் குழு ஒன்று பெங்களூரிலிருந்து புட்டபர்த்தி விரைந்துள்ளது.

ஆந்திர பிரதேச அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஸ் தலைமையிலான இந்தக் குழு பகவானுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

மனிதர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரை நாடுகின்றனர்.  பகவானுக்கு உடல் நலம் குன்றினாலும் மருத்துவரைத்தான் நாடுகின்றனர் என்பது இங்கே கவனிக்கதக்கது.

இந்நிலையில் இவர் உடல்நலம் தேறிட ஏராளமான இந்து சகோதரர்கள் பகவானைப் பிராத்தித்து வருவதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.  இவர்கள் பிராத்திப்பது வேறொரு பகவானையா அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் பகவான் புட்டபர்த்தி சாய்பாபாவையா என்பது என்னைப் போன்ற பாமரர்களுக்கு விளங்கவில்லை.

பெங்களூரிலிருந்து...
சாமிநாதன்.
நன்றி: உணர்வு

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...