அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb

குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் காபிர்களே.

குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் காபிர்களே.
குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்று சொல்பவர்கள் காபிர்கள் என்று நாம் தெரிவித்திருந்தோம்.
அஹ்லே குர்ஆனிகளின் கூட்டத்தைச் சார்ந்த விநாயகம் என்பவர் எந்த ஆதாரத்தின் படி அஹ்லே குர்ஆனிகளை காபிர்கள் என்று தீர்ப்பு வழங்குகிறீர்கள்? அல்லாஹ் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறானா? என்று கேள்வி கேட்டுருந்தார்.
அதற்கு நாம் சொன்னோம். இதை விளக்கி ஒரு தனி கட்டுரை எழுதுவோம் என்று சொல்­யிருந்தோம். அவருக்குரிய பதில் இதுதான்.
இஸ்லாத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. 1, இஸ்லாத்தின்....
குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் காபிர்களே.
குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்று சொல்பவர்கள் காபிர்கள் என்று நாம் தெரிவித்திருந்தோம்.
அஹ்லே குர்ஆனிகளின் கூட்டத்தைச் சார்ந்த விநாயகம் என்பவர் எந்த ஆதாரத்தின் படி அஹ்லே குர்ஆனிகளை காபிர்கள் என்று தீர்ப்பு வழங்குகிறீர்கள்? அல்லாஹ் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறானா? என்று கேள்வி கேட்டுருந்தார்.
அதற்கு நாம் சொன்னோம். இதை விளக்கி ஒரு தனி கட்டுரை எழுதுவோம் என்று சொல்­யிருந்தோம். அவருக்குரிய பதில் இதுதான்.
இஸ்லாத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. 1, இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள். 2, இஸ்லாத்தின் நம்பிக்கை சாராத கிளைச் செய்திகள்.
அடிப்படையான செய்திகளுக்கு உதாரணமாக அல்லாஹ்வை நம்பவேண்டும். மலக்குமார்களை நம்பவேண்டும் இப்படி பல நம்பிக்கைகள். இதில் ஐந்து நேரத்தொழுகைகள் உட்பட கட்டாயம் நம்ப வேண்டிய செய்திகள்.
கிளைச் செய்திகளுக்கு உதாரணம் . ஐந்து நேரத்தொழுகை நமக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் நம்ப வேண்டும் என்று சொல்­யிருந்தேன். ஒருவர் ஐந்து நேரத்தொழுகை கிடையாது  என்று சொல்வரானால் அவர் இஸ்லாத்தின் நம்பிக்கையை புறக்கணித்து காபிராகிவிட்டார். ஒருவர் ஐந்து நேரத் தொழுகை உண்டு என்று சொல்கிறார். அதை நம்புகிறார். ஆனாலும் தொழுகையின் இருப்பில் விரலசைப்பதா? இல்லையா? தொப்பி அவசியமா? இல்லையா? இது போன்ற காரியங்களை மறுத்தால் அவர் காபிர் இல்லை. இது கிளைச் செய்திகளுக்கு சொல்லப்பட்ட உதாரணமாகும்.
இது போன்றுதான் இஸ்லாத்தில் மிக முக்கியமான நம்பிக்கை அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும், தூதருக்கு கட்டுப்படுவதுமாகும். அல்லாவுக்கு கட்டுப்படுவது என்றால் அவனது வழிகாட்டுதலான குர்ஆனுக்கு கட்டுப்படுவது. தூதருக்கு கட்டுப்படுவது என்றால் அவர் காட்டித்தந்த சொல் செயல், அங்கிகாரத்திற்கு கட்டுப்படுதல் ஆகும்.
ஒருவர் நான் அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்படுவேன். தூதருக்கு கட்டுப்பட மாட்டேன் என்று சொல்வரானால் அவர் காபிர். அவர் நரகவாசி என்று சொல்கிறோம்.
இதை நாமாக சொல்லவில்லை. அல்லாஹ் சொல்கிறான். அதை நாமும் செல்கிறோம்.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! 3 : 32
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். 33 : 66
இந்த வசனத்தை நன்கு சிந்தித்து பாருங்கள். நாம் சொன்னது சரியா? தவறா? என்று விளங்கும்.
மேலும் நாம் சொன்ன செய்திகளில் சந்தேகம், ஆட்சேபனைகள் இருந்தால் தாரளமாக தெரிவிக்கலாம். அதற்கு பதில் தருவோம்.
நன்றி மீண்டும் வருக.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...