தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்படு-Riyadh

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்படு குறித்தும் இத்தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவை வழங்கும் முகமாகவும் நேற்று (வெள்ளிக்கழமை 08.04.2011) மாலை 7 மணிக்கு சேப்பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் மமகட்சியின் முஸ்லிம் விரோத மற்றும் துரோகங்களை அறிஞர் பீஜே அவர்கள் தெளிவு படுத்தியதோடு யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்? எதற்காக திமுகவை நாம் ஆதரிக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
அவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயத்திற்குத்..

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்படு குறித்தும் இத்தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவை வழங்கும் முகமாகவும் நேற்று (வெள்ளிக்கழமை 08.04.2011) மாலை 7 மணிக்கு சேப்பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் மமகட்சியின் முஸ்லிம் விரோத மற்றும் துரோகங்களை அறிஞர் பீஜே அவர்கள் தெளிவு படுத்தியதோடு யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்? எதற்காக திமுகவை நாம் ஆதரிக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
அவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவை தற்போது 5 சத விகித இட ஒதுக்கீடும் வேலைவாயப்புமாகும். அதைத் தருவதற்குப் பரிசீலிப்பதாக தேர்தல் அறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார். எனவே திமுக கூட்டணியை நாம் ஆதரிக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
 கலைஞரின் தேர்தல் அறிக்கையில் அனைத்தையும் காப்பி அடித்த ஜெயலலிதா இட ஒதுக்கீடு பற்றி எதுவும் கூறவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் நலனில் கொஞ்சமும் அக்கறை காட்டாத அம்மாவை மமக தனது சுயநலனிற்காகவே ஆதரிக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் பீஜே அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
இந்த உரை ஆன்லைன்பீஜேவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த உரையை ஆவலுடன் ரியாதிலுள்ள மிட்சுபிஸி எலவேட்ர் கம்பனி வில்லாவிலுள்ள சகோரர்கள் கேட்டனர்.
ஆன்லைன் உரையைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில் ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின்னர் அவனுக்கு நன்மை தரும் முக்கிய மூன்று நன்மைகளில் கல்வி முக்கியமானது. அக்கல்வியே மனித வாழ்வின் இகபர விமோசனத்திற்கு வழிவகுக்கிறது என்பதை தெளிவு படுத்தியதோடு> எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வி கிட்டுவதற்கு  எம்மால் முடிந்த அனைத்து வழிவகைகளையும் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது உரையின் முத்தயாப்பில் தமிழகத்தில் தற்போது 5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்க அனைவரும் ததஜவுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மிட்சுபிஸி எலவேட்ர் கம்பனியில் பணியாற்றும் சகோதரர் கீழை மன்சூர் அவர்கள் தனது விடுதியறையில் உரையைக் கேட்பதற்கான ஏற்பாட்டை சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.
புகைப்பட உதவி கீழை மன்சூர்

Post a Comment

0 Comments