குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றது , அடுத்த கட்ட போராட்டம் குஜராத்தில் ஆரம்பம் – அண்ணா ஹசாரே


மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள்



விடுத்துள்ளார்.
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை குஜராத்திலிருந்துதான் துவக்க வேண்டியிருக்கும் என கருதுகிறேன் என்றார் ஹஸாரே.
இந்தக் கலந்துரையாடல்களில் சமூக நல ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகா சாராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-தினமணி 27-5-2011

Post a Comment

0 Comments