உடனடி வேலை வாய்ப்பைதரும் பிளாஸ்டிக் தொழிழ் நுட்ப துறையில் டிப்ளோமா படிப்புகள்

இந்திய அரசின் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்று CIPET. இது சென்னை கிண்டியில் உள்ளது, இங்கு பிளாஸ்டிக் தொழிழ் நுட்ப துறை சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்குள்ள டிப்ளோமா படிப்புகள் CIPET JEE என்ற தேர்வின் மூலம் நிரப்ப படுகின்றன.
இங்கு B.E படிப்புகளும் உள்ளன, ஆனால் அவை..



அண்ணா பல்கலை கழகத்தினால் நிரப்ப படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களு படித்து முடித்த உடன் வேலைகிடைகின்றது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக Campus Interview மூலம் 95 % மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கு பயிலும் பெரும்பாலான முஸ்லீம் மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவி கிடைக்கின்றது, மேலும் முஸ்லீம் மாணவர்களுக்கு இங்கு குறைந்த கட்டணத்தில் ஹாஸ்ட்டல் வசதியும் உள்ளது.
கீழ்காணும் டிப்ளோமா படிப்புகள் CIPET -ல் பயிற்றுவிக்கப்படுகின்றன .
டிப்ளோமா படிப்புகள் (மூன்று ஆண்டு) : DPT (Diploma in Plastics Technology), DPMT (Diploma in Plastics Mould Technology)ஆகிய 2 படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தகுதி : 10 ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும், வயது 19 -க்கு குறைவாக இருக்க வேண்டும்.
Post டிப்ளோமா படிப்புகள் : இது டிப்ளோமா மற்றும் பட்ட படிப்பு முடித்தவர்கள் படிக்கும் ஒன்றரை ஆண்டு படிப்பாகும். PD-PMD ( Post Diploma in Plastics Mould Design), PGD-PPT (Post Graduate Diploma in Plastics Processing & Testing) ஆகிய 2 படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தகுதி : டிப்ளோமா படித்தவர்கள் அல்லது வேதியியலை ஒரு பாடமாக கொண்ட B.Sc. படித்தவர்கள்.
மேற்கண்ட படிப்புகளில் சேர CIPET JEE என்ற நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
CIPET JEE நுழைவு தேர்வு விபரம் :
விண்ணப்பம் கிடைக்கும் இடம் : CIPET, கிண்டி (சென்னை IIT -க்கு எதிரில் உள்ளது. அண்ணா பல்கலை கழகத்திற்க்கு அருகில் உள்ளது)
விண்ணப்பம் பெற கடைசி நாள் : 3/06/11 (இன்ஷா அல்லாஹ்)
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் : 10/06/11
தேர்வு நடைபெறும் தேதி : 10/07/11
வகுப்புகள் துவங்கும் தேதி : 16/08/11
கல்வி கட்டணம் : செமெஸ்ட்டருக்கு ( 6 மாதம்) ரூ.10,000 முதல் 14,000 வரை
கல்வி உதவி : மத்திய அரசினால் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி பெற இங்கு சிறப்பான ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து விபரங்களும் இந்த www.cipet.gov.in இணைய தளத்தில் உள்ளது.
S.சித்தீக்.M.Tech

Post a Comment

0 Comments