மொட்டுக்கள் மலர…….. தொடர் 02

தொடர் 1லிருந்து….
……… மேலே அடையாளப்படுத்திய இரண்டு விடயங்களும் எந்த பெற்றோர்களிடத்தில் நடைமுறையில் இருக்கின்றதோ அவர்கள்  தங்களது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதில் 60 சதவீத வெற்றியை பெற்றுவிட்டார்கள் என்பதே உண்மை.

மிகுதி 40 சதவீதத்தையும் வென்று எமது பிள்ளைகளை ஒரு வெற்றியாளனாக்குவதற்கு கீழ் வரும் விடயங்களை நடைமுறைப்படுத்தத் தயாராகுவோம்.

தொடரும் தொடர் இரண்டு:



Ø   சுய நம்பிக்கையை கட்டியெழுப்புதல் (Build Children’s Self Confidence):
சுய நம்பிக்கை என்பது அது ஒரு எல்லையற்ற சக்தி, அதனை யார் தனக்குள் சரிவர கட்டியெழுப்புகின்றார்களோ அவர்கள் எதற்கும் பயப்படாமல் எதையும் முன்நின்று செய்வார்கள், தோல்விகள் குறித்து அஜ்சமாட்டார்கள்.

இந்த சுய நம்பிக்கையை எமது பிள்ளைகளின் உள்ளங்களிலும்  எண்ணங்களிலும் வளர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சிக்க வேண்டும்.

எமது பிள்ளைகளுக்கு சுய நம்பிக்கையைக் கட்டியெழுப்ப கீழே சில முக்கியமான ஒன்பது விடயங்களை வரிசைப்படுத்தியிருக்கின்றேன். இந்த விடயங்களை மீன்பிடி தூண்டலுக்கு தேவையான இரகாக நினைத்து செயற்படுத்திக் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

1.   இறையச்சத்தை ஊட்டுதல் (create as a Good worshiper)
இறையச்சம் யாருடைய உள்ளத்தில் இல்லையோ அவனது வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும். அவன் எது வேண்டுமென்றாலும் செய்யலாம், அவனுக்கு ஹலால் ஹறாம் தெறியாது, அதனைப்பற்றி சிந்திக்க மாட்டான், அது அவனை இவ்வுலக மற்றும் மறுமை வாழ்விலும் படு மோசமானளவில் தோல்வியைத் தழுவச் செய்யும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சிறுவனாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் செய்த உபதேஷம் இந்த இடத்தில் மிக முக்கியமானதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களுக்கு (அவர்களின் ஒட்டகத்தில்) பின் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் (என்னை அழைத்து) கூறினார்கள்:

சிறுவனேநிச்சயமாக நான் சில விடயங்களை   உனக்கு கற்றுத் தருகின்றேன், நீ அல்லாஹ்வை (அவனது கடமைகளை) பேணி நட, அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான், அவன் உனக்கு முன்னால் இருப்பது போல நினைத்து செயற்படு, உனக்கு எது வேண்டுமானாலும் அல்லாஹ்விடத்தில் கேள்! உனது உதவிகளை அவனிடத்திலேயே கேள்

தெரிந்து கொள்!!, இந்த சமூகமெல்லாம் ஒன்று சேர்ந்து உனக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அல்லாஹ் நாடவில்லை ன்றால் அது முடியாததாகும், அதேநேரம் இந்த உலக மக்கலெல்லாம் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்ய நினைத்தாலும் அல்லாஹ் நாடாவிட்டால் அது எந்த பயனையும் தராது. (கலா கத்ருடைய) பேனை உயர்த்தப்பட்டுவிட்டது, எழுது பலகையும் காய்ந்துவிட்டது.                                 ஆதாரம்: திர்மிதி.

உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுதல்,                 நேரத்திற்கு நேரம் ஏனைய வணக்க வழிபாடுகளை தவறாது செய்தல்,
அன்றாடம் அல் குர்ஆன் ஓதுதல்,                                      அன்றாடம் ஓதவேண்டிய துஆக்களை கற்றுக் கொடுத்து அதனை உரிய நேரத்திற்கு ஓதுவதை கவனித்தல்,                                                               சுத்தமாக இருத்தல், தனது  பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்,   
புத்தக, கொப்பிகளை நல்ல முறையில் வைத்துக் கொள்ளல்,
நல்ல நண்பர்களுடன் பழகுதல்,
சொந்தக்காரர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுதல்
மற்றும் இதுபோன்ற அனைத்து விடயங்களிலும் உரிய முறையில் செயற்படுவது இறையச்சத்தைத் தூண்டும் கைங்கரியங்களாகும்.

2.     பிள்ளைகளின் நன்நடத்தைகளையும் அவர்களின் சாதனைகளையும் பாராட்டுதல், (Praise their Good Work and Achievements)

எமது பிள்ளைகளை பாராட்டுவதற்கு இப்போதே ஆரம்பிப்போம்.
பிள்ளைகளின் அன்றாட நடத்தைகளில் பாராட்டத்தக்க செயல்களை இனங்கண்டு புன்சிரிப்புடன் புகழுங்கள், அப்படிப்பட்ட நல்ல செயல்களை தொடர்ந்தும் செய்வதற்கு தூண்டுங்கள்.

எனது அன்பின் மகனே……….
நீ படிப்பில் நல்ல வேகம்,,,”                          
உனது கையெழுத்து அழகாக இருக்கின்றது” 
நீ வீட்டு பயிற்சிகளை நன்றாக செய்கின்றாய்” 
உனது சொல்லெழுத்துக்கள் நன்றாக இருக்கின்றது:                       “நீ படிக்கும் பாடங்களை நல்ல முறையில் ஞாபகம் வைத்துக் கொள்கிறாய்” 
உனது உதவிக்கு நன்றி

எமது பிள்ளைகளின் ஒவ்வொரு நடத்தைகளையும் மிக நுனுக்கமாக கவனித்து தண்டிப்பதற்கு அல்லது மோசமாக பார்ப்பதற்கு மாற்றமாக  அதனை பாராட்டவேண்டும், அவ்வாறு செய்யும் போது எமது பிள்ளைகள் தங்களது செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துவார்கள்.

ஒரு பாடத்தை வாசிக்கும் போது, பயிற்சியை செய்யும் போது,     இவ்வாறு ஒவ்வொரு காரியத்தின் போதும் தந்தையின் தாயின் பாராட்டு வார்த்தைகள் ஞாபகத்திற்கு வரும், இது மேலும் அதிக பாராட்டுதலை வாங்க வேண்டும் என அவனை தூண்டும், அதே நேரம் இந்த நடத்தைகள் எதிர்மாறாக சென்றுவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.

எமது மனைவி எம்மை பாராட்ட வேண்டும், எமது செயல்களை புகழ வேண்டும், அல்லது மனைவிமார்கள் புகழும் போது நாம் எவ்வளவு சந்தோஷமடைகின்றோம், அதே போல் தான்  நாம் எமது மனைவியையும் புகழவேண்டும்,

எப்படி நாம் எம்மை ஒருவர் பாராட்டும் போது அதனை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோமோ அவ்வாரே எமது பிள்ளைகளும் இருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

நாம் ஒருவரை எவ்வளவு அதிகம் பாராட்டுகின்றோமோ அவ்வளவு அதிக பாராட்டுதல்களை நாம் பெற்றுக் கொள்வோம், இது  எமது வாழ்க்கையிலும் எப்போதும் பிரயோசனம் தரக் கூடியதாகும், அது வியாபாரமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்.
நாம் ஒருவரிடத்திலிருந்து பாரட்டுதலையும் புகழையும் பெற்றுக் கொள்ளும் போது எவ்வளவு சந்தோஷப்படுகின்றோமோ அதைவிடவும் அதிகமான சந்தோஷத்தையும்  உற்சாகத்தையும் சிறு உள்ளம் படைத்த எமது பிள்ளைகள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஆனால் எமது பாராட்டுதல் உரிய நேரத்தில் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றதா? என்பதை கவனிக்க வேண்டும், அதே நேரம் எல்லா விடயங்களுக்கும் அவர்களை பாராட்ட முடியாது அல்லது அவ்வாறு செய்வது கஸ்டம் என்று நினைத்தால் எமது பிள்ளைகள் நல்லது செய்யும் போது அவர்களது கண்களை நேராக பார்த்து புன்னகிப்பது எமது பாராட்டுதலை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்கு ஒரு ஊடகமாக அது இருக்கும்.

பிள்ளைகளை அவர்கள் செய்யாத ஒன்றுக்கும் அல்லது அளவுக்கு அதிகமாகவும் பாராட்டுவதிலும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
அதே நேரம் பிள்ளைகளின் நன்னடத்தை குறையும் போது, உடனே அவர்களுக்கு அதற்குரிய காரணங்களை கற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை உண்டுபண்ணிக் கொடுக்க வேண்டும். அதற்காக வேண்டி சில நேரங்களை அவர்களுடன் செலவளிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments