தக்லீ்த் ஓர் ஆய்வு. (தொடர் 06)
ஸஹாபாக்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாகுமா?


ஸஹாபாக்களைப் பின்பற்றுவதும் வழிகேடுதான் என்பது தொடர்பாக கடந்த தொடர்களில் நாம் தெளிவாக விளக்கியிருந்தோம்.

இதே நேரம் சகாபாக்கள் நம்மை விட ஈமானில் முதியவர்கள் என்பதில் எல் முனையளவுக்கும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் நபியவர்களின் தோழர்களும் மனிதர்கள் என்பதினால் அவா்களும் பல இடங்களில் குா்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அவை எவை என்பது தொடர்பாக இந்தத் தொடரில் நாம் பார்ப்போம்.

முத்தலாக்கும் உமர் பின் கத்தாப் (ரலி) அவா்களும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும்அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள்நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?) என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) , நூல் : (முஸ்லிம் 2689)

முத்தலாக் என்று கூறினால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர். ஸஹாபாக்களைப் பின்பற்றலாம், அவா்களைப் பின்பற்றுவதும் நன்மைதான் என்ற கொள்கையுடையவர்கள் இந்தச் செய்தியை ஊன்றி கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.

நபியவர்கள் எதனை ஒரு தலாக் என்று சட்டம் சொன்னார்களோ அந்த சட்டத்தை அப்படியே மாற்றி உமர் (ரலி) அவா்கள் முத்தலாக் என்று சட்டம் சொல்கிறார்கள். இப்போது நபியைப் பின்பற்றுவதா? அல்லது உமரைப் பின்பற்றுவதா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மையான ஏகத்துவவாதி ஸஹாபாக்களை தனது தலை மேல் வைத்து மதிக்க வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்ற கருத்தை ஒரு ஏகத்துவவாதி ஏற்றுக்கொள்ளமாட்டான், ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பதே இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.

அபூமூஸா (ரலிஅவா்களும், ஆதாரம் கேட்ட உமர் பின் கத்தாப் (ரலி) அவா்களும்.

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), 'அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்என்றார்கள். 'அவர் திரும்பிச் சென்று விட்டார்என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி)அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது)இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், 'இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்  என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள்நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) யை உமர் (ரலி) யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி)நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதாநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா   நூல்: புகாரி 2062, 6245

நபியவர்களின் தோழர்களின் மிக முக்கியமானவர்களின் ஒருவர் தான் உமர் (ரலி) அவா்கள், அவா்களுக்கே மேற்கண்ட சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது. காரணம் வியாபாரத்தில் ஈடுபட்டதினால் சில நேரங்களில் நபியிடத்தில் அவா்களுக்கு இருப்பதற்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் அவா்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போய் இருக்கிறது என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரியவரும் உண்மையாகும்.

கொள்ளை நோயின் பரவலும் அப்துர் ரஹ்மான் பின் அவ்பின் தெளிவும்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போதுபடைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்துஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள்ஷாம் நாட்டிற்குப் போகலாமாஎன்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள்இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்என்று சொல்ல நான் கேட்டேன்என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 5279

கொள்ளை நோய் பரவுதல் தொடர்பாக நபியவர்கள் தெரிவித்த மேற்கண்ட செய்தி ஸஹாபாக்களைப் பின்பற்ற முடியும் என்று சொல்பவர்கள் முதற் கொண்டு அநேகருக்குத் தெரியும். ஆனால் உமர் (ரலி) அவா்களுக்கு அது தொடர்பான செய்தி தெரியாமல் இருந்திருக்கிறது. என்பதை மேற்கண்ட செய்தி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

குளிப்பு எப்போது கடமை?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டேன். அதற்கு மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)    நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102

சட்டம் மாற்றப்பட்ட விஷயம் அனைவரும் பெரும்பாலும் அறிந்த ஒன்று. ஆனால் இந்தச் சட்டம் தெரியாமல் உஸ்மான் (ரலி) அவர்கள்இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்னஎன்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்குஅவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டுதொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)  நூல்: புகாரி 179, 292

மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போயுள்ளது. நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் இப்போது உஸ்மானைப் பின்பற்றுவார்களா? அல்லது நபியவர்களைப் பின்பற்றுவார்களா?

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மம் செய்வது கூடுமா?

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி)அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) யிடம்அபூ அப்திர்ரஹ்மானே ! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்என்று கேட்டார். தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லைஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானதுஎன்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்என்று கேட்டார். அதற்கு, (இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதாஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற இறை வசனத்தை என்ன செய்வீர்கள்என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்குஇந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா   நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும்அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும்சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?

நபித் தோழர்களைப் பின்பற்றலாம் என்றால் இப்னு மஸ்ஊத் (ரலி) அவா்கள் விஷயத்தில் என்ன தீர்பை சொல்லுவது?

நபிகள் நாயகத்தின் மரணமும், குா்ஆனின் தீர்ப்பும்.

(நபி - ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும்அவரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) உட்கார மறுத்ததும்மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவேஅபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி)உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத்தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களாவந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாகஅபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1242, 3670

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம்நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித்தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.

நபித் தோழர்களையும் பின்பற்றலாம், அதுவும் மார்க்கம் தான் என்று பிதற்றக் கூடியவர்கள் இந்தச் செய்திக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

ஆய்வு தொடரும்...................

Post a Comment

0 Comments