அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


13 வயது முஸ்லிம் சிறுமி போலிசால் (கற்பழித்துக்) கொடூரக்கொலை

உ.பி. மாநிலத்தில், லகிம்பூர் கேரி என்ற இடத்தில் 13 வயது (சில ஊடகங்கள் 14 வயது என்கிறது) அப்பாவி சிறுபிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை (10/06/2011) அன்று போலிசாரால் காவல் நிலையத்திலேயே காட்டுமிராண்டித்தனமாக கற்பழித்து கொடூரமாக கொலை செய்த மகாபாதாக உலகை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது (வழக்கம் போல தமிழ் செய்திகள் இவற்றை தவற விட்டுள்ளன).
ஆடு/மாடு மேய்க்க சென்ற சோனம் என்ற 13 வயது அப்பாவி சிறுபிள்ளை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் இன்திஜாம் அலி மற்றும் தர்ரான்னும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்ற போது காவல் நிலையத்தில் உள்ள மரத்தில் அந்த சிறுபிள்ளை அவரது துப்பட்டாவால் தூக்கில் தொங்க விடப்பட்டு இருப்பது கண்டு கதறி அழுததைப்பார்த்த கருங்காலி காவல்துறையினர், உடனே பிரேதத்தை எடுத்து சென்று ஓடிவிடுமாறு கட்டளையிட்டுள்ளனர் அந்த காட்டுமிராண்டிகள்.


 அந்த பச்சைப்பாலகி, சிறுமி கொடூரமாக கற்பழித்து கொலை செய்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர், ஆனால் முதல் பிரேத பரிசோதனை இது தற்கொலை என்று சொல்லி கண் துடைப்பிற்காக காட்டுமிராண்டி காவல்துறையினர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர்.
பொது மக்களின் ஆவேசத்தால், வாய் மூடி இருந்த மாயாவதி அரசு, வேறு வழியின்றி (இன்னும் ஒரு வருடத்தில் அங்கு தேர்தல் வருவதால்) CB-CID விசாரணைக்கு உத்தரவி்ட்டது.
அடக்கம் செய்யப்பட பிரேதத்தை மீண்டும் எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனைசெய்யப்பட்டதில் ”இது கொலை என்றும், கற்பழிப்பு இல்லை ” என்றும் வந்திருக்கிறது, இதை மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் ஆவேசத்தோடு மறுத்துள்ளனர்.
கடைசியாக வந்த தகவலின் படி, மூன்று கருங்காலி காவல்துறையினர் மீது மட்டும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் முதல் பிரேத பரிசோதனை செய்த மூன்று மருத்துவர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
வேலியே பயிரை மேயும் இதுபோன்ற அவலம் கொடூரம் என்றுதான் ஒழியுமோ, பண்பாட்டிற்கு பேர் போன நாடு என்று சொல்லப்படும் (உண்மையில் பேர் பொய்விட்டது)  இந்தியாவில் இது போன்ற அவலங்கள், அசிங்கங்கள், கேவலங்கள், கொடூரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை.
செய்தி – அல்மதரஸாசி

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...