தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery  மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzUucd2zuHW5ORDbni9M1cFAvDemV8iQOi4KNvBXPZuo3hITVjSObUAnDmWytETisY78eZooPRsz1cdkFhSgakHB7Ps1D5jvNP-mbaf8sOoPWKUphIIdk_fiPagUfaNCJLUzEjlxV8VsAn/s1600/bottles.jpgஅனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் முதல் வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
 
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg34qyhNxFil763fnxpUxW21Y5clVr8Rr-igc1JamW-v23D8joylY33uOCDCgw9_D86crf1VN1pn92_0kz3HN1WD5txK8i49VnJNmEGgpCBrQPJ-qF6F3F1lyCb8juqFrwF8BSWPF-lGYyo/s1600/2434337918_e1e84b0c21.jpg
இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்

Post a Comment

0 Comments