தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.
தவ்ஹீத் ஜமாத்தா? அல்லது தக்லீத் ஜமாத்தா?

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை தடுக்க நினைக்கும் சில சுயநலவாத சிந்தனை கொண்ட கயவர்கள் தவ்ஹீத் ஜமாத் மீதும் தவ்ஹீத் வாதிகள் மீதும் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் அந்த குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச் சாட்டு தவ்ஹீத் வாதிகள் தக்லீத் (தனி மனித வழிபாடு)செய்கிறார்கள் என்பதாகும்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்பகாலங்களில் நாம் குர்ஆனும்,ஹதீஸ{ம் மாத்திரம் தான் மார்க்க ஆதாரம் மத்ஹபுகளோ இமாம்களோ தரீக்காக்களோ மார்கத்தின் ஆதாரங்கள் இல்லை என்று உடைத்துப் பேசுகின்ற போதெல்லாம்.நம்மை எதிர்த்தவர்கள் நம்மீது சொன்ன குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமானது.

இவர்கள் இமாம்களைத் திட்டுகிறார்கள்.

இமாம்களை இவர்கள் மதிப்பதில்லை.

இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் மன்றில் வைக்கப் பட்டது.

அல்லாஹ்வின் பேருதவியால் அந்த அனைத்து வாதங்களும் அடித்து நொருக்கப் பட்டது.

இப்போது நம்மை நோக்கி இவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார்கள்.

பி.ஜெயை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள்
 
என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள்.

அதாவது ஸஹாபாக்கள் ஈமானிலும்,தியாகத்திலும் நம்மை விட பண்மடங்கு உயர்ந்தவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அவர்களின் சொந்தக் கருத்து மார்கத்தின் ஆதாரமாகாது.என்பதுதான் நமது வாதம்.

சகோதரர் பி.ஜெ அவர்கள் ஒரு சிறந்த மார்க்க அறிஞர் பண்முக ஆளுமை கொண்டவர் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவர் சிறந்த அறிஞர் என்பதற்காக எந்தத் தவ்ஹீத் வாதியும் அவரின் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதில்லை பின்பற்றவும் கூடாது.

இன்றைக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் தாங்கள் எடுத்து வைக்கும் தவறான வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போவதாலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அபார தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளதாலும் அவரை எதிர்க்க தங்களுக்கு திராணியில்லாததினால் தக்லீத் என்ற ஒரு கோஷத்தை இன்று கையிலெடுத்துள்ளார்கள்.

தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமன்றி அரபுலகத்திலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் மார்க்கம் தொடர்பான கருத்துக்கள் இன்று மெச்சப்படுவது அனைவரும் அறிந்ததே!

இந்த வகையில் இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் சில ஆலிம்களும் மதனிகளும் வெளிநாட்டில் பட்டம் பெற்றதாக சொல்லிக் கொள்ளும் சில பச்சோந்திகளும் தமது கருத்து மக்கள் மத்தியில் எடுபடாமல் போகிறதே என்ற விரக்தியில் இந்த தக்லீத் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

இது தவிர சகோதரர் பி.ஜெ உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்த சிலர் ஒழுக்க சீர் கேடு பண மோசடி உள்ளிட்ட காரணங்களினால் அந்த அமைப்பை விட்டு வெளயேற்றப் பட்டனர்.

நம்முடன் இருக்கும் வரையில் நமது கருத்துக்களை விமர்சிக்காதவர்கள் ஜமாத் அவர்களின் குற்ற செயலை நிரூபித்து ஜமாத்தை விட்டே அவர்களை வெளியேற்றியவுடன் இதே தக்லீத் வாதத்தை அவர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

ஆக இப்படிப்பட்ட அனைத்துத் தரப்பாரின் வாதங்களுக்கும் பதில் கொடுக்கும் வகையில் இந்தக் கட்டுரை ஒரு தொடராக எழுதப் படுகிறது.

இந்தத் தொடரில் குர்ஆன் ஹதீஸ் பார்வையில் தக்லீத் என்றால் என்ன? தக்லீத் பற்றி மாற்றுக் கருத்தாரின் விமர்சனம் மற்றும் அதற்கான பதில் இஸ்லாம் தக்லீதைப் பற்றி என்ன சொல்கிறது? தக்லீத் விஷயத்தில் பி.ஜெயின் நிலைப்பாடு என்ன? தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பி.ஜெயை தக்லீத் செய்கிறார்களா? போன்ற தகவல்கள் எழுத்து மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் விபரிக்கப்படும்.

ஆய்வு தொடரும்………………

Post a Comment

0 Comments