அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இந்த வலைப்பதிவு இந்த வலைப்பதிவு Loading... 6/28/2011 ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்

வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு சென்றாலும் கூட்டம் எங்கு பார்த்தாலும் கூட்டம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதற்குள் நம்மை கசக்கி பிழிந்து விடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயணம் செய்ய மற்ற வாகனங்களை விட ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர்.  கட்டணமும் குறைவு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லலாம் மற்றும் இரவு முழுவதும் எந்த வித பிரச்சினையுமின்றி தூங்கி கொண்டே செல்லலாம் என்ற பல காரணங்களால் மக்கள் அனைவரும் ரெயிலில் செல்வதை விரும்புகின்றனர். 
 
ரயில்வே டிக்கட்டுகளை 90 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளதால் டிக்கட்டுகள் மளமளவென காலியாகி விடுகிறது. லைனில் காத்து கிடக்க தேவையில்லை வீட்டில் படுத்துக்கொண்டே டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற வசதிகளாலே பெரும்பாலானவர்கள் இந்த ஆன்லைன் முறையை விரும்புகின்றனர். இப்படி ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறிய சிறந்த 5 தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.

IRCTC 
ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறியவும் டிக்கட்டுகளை முபதிவு செய்யவும் உதவும் மிக சிறந்த தளமாகும். இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டியது அவசியம். உறுப்பினரானால் தான் ரயில் விவரங்களை உங்களால் கண்டறிய முடியும். இணையத்தில் இந்த ஒரு தலத்தில் மட்டும் தான் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும். காலை 8 TO 10 தட்கல் டிக்கட் வழங்கும் நேரம் என்பதால் அந்த சமயத்தில் இந்த தலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிக சிரமம். மற்ற சமயங்களில் நன்றாக இயங்கும். 

INDIAN RAILWAY
இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை பெற உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த ரயிலை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். PNR நிலைப்பாட்டையும் இந்த தளம் மூலம் அறியலாம்.  இந்த தளத்தில் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியாது 

இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும். மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக அந்த ஏரியாக்களின் டிராவல்ஸ் கம்பெனிகளின் முகவரியோடு தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

TRAIN ENQUIRY
ரயில் நேரங்களை அறிய இந்த தளமும் மிக பிரபலமான தளம். ரயில் எண் அல்லது ரயிலின் பெயரை கொடுத்தாலே போதும் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தளத்தில் PNR விவரங்களை அறிய முடியாது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...