ஜும்மா தொழுகை ஃபர்லா அல்லது வாஜிபா அல்லது சுன்னத்தா?



கேள்வி : ஜும்மா தொழுகை ஃபர்லா அல்லது வாஜிபா அல்லது சுன்னத்தா?விளக்கம் தரவும்.
- sharfudeen UAE

பதில் : ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும்.

அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(அல் குர்ஆன் 62:9)
'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்: அபூதாவூத் 901
ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 1. பருவ வயதை அடையாதவர்கள். 2. பெண்கள் 3. நோயாளி 4. பயணிகள். இந்த நான்கு பேர்களைத் தவிர மற்ற அனைவர் மீதும் ஜும்மா கட்டாயக் கடமையாகும்.

- பதில் : ரஸ்மின் MISc

Post a Comment

0 Comments