வெள்ளிக் கிழமையின் சிறப்பும் அதன் சட்டங்களும். தொடர் – 01


வெள்ளிக் கிழமையின் சிறப்புக்கள்.
ஜும்ஆ என்ற இந்த வணக்கம் ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய சிறப்பு வழிபாடாகும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்பிருந்து ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைவன் இதை வழங்கினான் சமுதாயங்களில் நாம் தான் கடைசி சமுதாயமாக இருப்பதனால் நமக்கு ஒரு நாளை தேர்வு செய்து வழிபாடு நடத்துவற்கு தந்துள்ளான் இது பற்றி பின்வரும் நபி மொழி நமக்கு தெளிவு படுத்துகிறது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வௌ;ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வௌ;ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள். (முஸ்லிம் 1550,1551)
வாரத்திற்கு ஒரு நாள் ஒதுக்கி சிறப்பு வழிபாடு நடத்துவது என்பது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரான நமக்கு மாத்திரம் இல்லை நமக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தினருக்கும் அல்லாஹ் வழிபாடு நடத்துவதற்கு ஒரு நாளை தேர்வு செய்து கொடுத்திந்தான் இது ஒரு புதிய நடை முறையில்லை என்பதைப் மேற்கண்ட செய்தியில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
மற்ற நாட்களுக்கு இல்லாத இந்த வெள்ளிக் கிழமைக்கு மாத்திரம் உள்ள சில சிறப்புக்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக் கிழமை படைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதம் (அலை) அவர்கள வெள்ளிக் கிழமை படைக்கபட்டார்கள் என்றால்  மனித குலம் தோன்றியதும் வெள்ளிக் கிழமைதான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக் கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள் ; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள். (முஸ்லிம் 1548)
ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக் கிழமையில் படைத்து வெள்ளிக் கிழமை அவர்களை ஒரு சுவனத்தில் அல்லது ஒரு தோட்டத்தில் குடியமர்தினான். அந்த தோட்டத்தில் அல்லது சுவனத்தில் குடியமர்த்தப்பட்டு அவர்கள் செய்த தவறின் காரணமாக அதில் இருந்து வேளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றப்பட்ட பிறகு அவர் அல்லாஹ்விடம் அழுதழுது பாவமன்னிப்புத் தேடினார்கள். இது பற்றி அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் (7:23)
ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புத் தேடி அவர்களுடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதற்கு தேர்வு செய்த நாளும் வெள்ளிக் கிழமைதான்.
ஆதம் (அலை) அவர்கள் மன்னிப்புப் பெற்றதும் படைக்கப்பட்டது உயிர் வாங்கப்பட்டதும் வௌ;ளிக்கிழமைதான்.
ஆதம் (அலை) பிறப்பும் இறப்பும் வெள்ளிக் கிழமையில் நடந்த மாதிரி  மனித குலத்தினுடைய பிறப்பும் அழிவும் விசாரணையும் வெள்ளிக் கிழமைதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இது அல்லாத சிறப்புக்கள் இருப்பதாக கூறப்படும் செய்திகள் இட்டுக் கட்டப்பட்டவையாகும்.
மற்ற சமுதாயத்தினருக்கு வழிபாட்டிற்கு ஒரு நாளைத்தான் அல்லாஹ் தெரிவு செய்து கொடுத்திருந்தான் ஆனால் நமக்கு வழிபாட்டிற்கு தேர்வு செய்த நாள் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாக இருக்கிறது.
இஸ்லாத்தில் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட ஜும்ஆ.
இஸ்லாத்தில் முதன் முதலாவது ஜம்ஆவை ஆரம்பித்த பெருமை அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கே இந்தப் பெருமை சேரும். மக்காவில் நபி (ஸல்) அவர்களால்  நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நபித் தோழர் முதன் முதலில் மதீனாவிற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள பனூ பயாழா என்ற ஒரு கூட்டத்தினருக்குச் சொந்தமாக கூழாங்  கற்கள் நிறைந்த இடத்தில் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் தலைமையில் கிட்டத்தட்ட நாட்பது பேர்களை உள்ளடக்கிய ஒரு சிறு கூட்டத்தினர் இவரின் தலைமையில் தொழுதார்கள் என்ற வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில்  அல்லாஹ்வின் தூதர் என்று மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள் பிரச்சாரம் செய்யும் போது கடுமையான சோதனைகளுக்கும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் இந்த சத்தியப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வந்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் தொழுகை நிறைவேற்றும் போது கூட அவர்கள் அனைவர்களும் கூட்டாகத் தொழ முடியாத ஒரு நிர்ப்பந்தமான நிலை இருந்தது.
மக்காவில் நபியாக வாழ்ந்த பதின் மூன்று வருட காலத்தில் அவர்கள் ஜும்ஆவை நடத்த முடியவில்லை. மக்கா வெற்றிக்குப் பிறகுதான் அங்கு ஜும்ஆ நடைபெற்று வந்தது. மக்காவைப் பொறுத்த வரை அறபுக்கள் அனைவர்களும் கஃபாவை புனிதமான ஒரு ஆலயமாகக் கருதி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலத்தில் அனைவர்களும் மக்காவிற்கு யாத்திரிகை மேற் கொண்டு மக்காவை நோக்கி வருவார்கள். அப்படி மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத் தூதர் என்பதையும் இஸ்லாத்தினுடைய சட்டதிட்டங்களையும் ஓர் இறைக் கோட்பாட்டையும் சிலை வணக்கத்தையும் எதிர்த்து உள்ளுர் மக்களுக்கு சொல்வது போன்று வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும்  பிரச்சாரம் செய்வார்கள். இப்படி பதின் மூன்று வருட காலம் செய்து வந்தார்கள் இப்படி நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது வயதில் மதீனாவில் இருந்து ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு ஹஜ் செய்வதற்காக வேண்டி வருகை தந்தார்கள். அந்த ஆறு பேர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போதனையைக் ஆறு பேர்களும் கேட்ட போது அவர்களுக்கு ஒரு மன மாற்றம் ஏற்பட்டு இவர் கூறுவது சரியாகத் தோன்றுவதாக அவர்களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் அந்த நேரம்; இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நபி (ஸல்) அவர்களை சந்தித்து விட்டு மதீனாவிற்குச் சென்ற இவர்கள் அடுத்த ஆண்டு வரும் போது இந்த ஆறு பேர்களுடன் சேர்ந்து பனிரெண்டு பேர்கள் மதீனாவில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மக்காவிற்கு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தைக் கணித்து வருகிறார்கள் ஏனெனில் ஹஜ்ஜுடைய காலம் அல்லாத காலத்தில் முஹம்மதை சந்திக்க வந்தவர்கள் என்று மக்கா இணைவைப்பாளர்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு  சொல்லொன்னாத் துன்பதைக் கொடுப்பார்கள் அதனால் தான் அவர்கள் ஹஜ் காலத்தை தேர்வு செய்தார்கள். இந்த பனிரெண்டு பேர்களும் நபி (ஸல்) அவர்களை தனித் தனியாக சந்தித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும் ஏற்றுக் கொண்டதோடு இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாகவும் ஏற்றுக் கொண்டு உயிருள்ள வரை இஸ்லாத்தை உயிருள்ள வரை பின்பற்றுவதாகவும்  இன்னும் பல உடன் படிக்கைகளையும் எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் ஊராகிய மதீனாவிற்குச் சென்று அங்கு இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்வதாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு உறுதி மொழி கொடுத்தார்கள். இவர்கள் ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களின் தலைமையில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இவர்கள் தான் இஸ்லாமிய சாம்ராஜியம் மதீனாவில் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களில் தலைமையில் இஸ்லாமிய அரசு உருவாகுவதற்கு  முக்கிய காரணமாக இருந்தவர்களில்  கஅப் பின் மாலிக்,  உபாதா பின் அஸ்ஸாமித், உக்பா பின் ஆமிர், பத்ருப் போரில் அபூ ஜஹ்லைக் கொன்ற முஆத் (ரலி) ஆகியோர் அடங்குவார்கள்.
இந்த பன்னிரெண்டு பேர் நபி (ஸல்)  அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இஸ்லாத்தை எற்றபின் நீங்கள் உங்கள் ஊருக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் ஏனென்றால் மக்காவில் ஜும்ஆ நடத்த இயலாது. அதனால் நீங்கள் மதீனாவிற்கு சென்று அங்கு ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் என்று அந்த பன்னிரெண்டு பேரில்  அஸ்அத் பின் சுராரா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவர் அங்கு சென்று ஜும்ஆவை நடத்தினார்.
இது நபி (ஸல்) அவர்களின் 52 வது வயதில் நடந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நியமனம் செய்து 12 வது வருடத்திற்கு பிறகு முதல் ஜும்ஆ நடந்தது. தொடர்ந்து ஜ‚ம்ஆ நடந்து கொண்டே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஊரி(மக்காவி)ல் ஜும்ஆ நடத்தவில்லை. நடத்துவதற்கான வாய்ப்பு அங்கு இல்லை. முதன்முதலில் ஜும்ஆ தொழுகை நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் நடத்தியது அஸ்அத் பின் சுராரா என்ற ஒரு ஸஹாபி தான்.
கியாமத் நாள் வரை நடக்கும் ஜும்ஆவின் நன்மைகளில் ஒரு பங்கு அவருக்கும் இருக்கும். இந்த நல்ல காரியத்தை நபி (ஸல்) அவர்களின் கட்டளையினை ஏற்று தொடங்கி வைத்ததற்கான நன்மை அவருக்கும் சேரும். புதிய மார்கமாக மதீனாவில் இருப்பதால் அவர்கள் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினால் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணி ஊருக்கு வேளியே பனூ பயாளா என்ற சமுதாயத்திற்குச் சொந்தமாக கூழங்கற்கள் நிறைந்த மணல் பகுதியில் நடத்தினார்கள்.  இங்கு ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும் இன்றை அறிஞர்கள் ஜும்ஆவை நடத்துவது என்றால் அது பள்ளிவாசலாக இருக்க வேண்டும், வக்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் கூரை இல்லாத கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமா? என்றல்லாம்  கூறுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்ட முதலாவது ஜும்ஆ தனியாருக்கு சொந்தமான மதீனாவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் தான் நடத்தப்பட்டது. இவர்கள் பன்னிரெண்டு பேர்களுடன் சேர்த்து கிட்டத்தட்ட நாற்பது பேர்கள் இருந்தார்கள்.  நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்து அவர்கள் தலைமையில் ஜும்ஆ நடைபெறும் வரையும் அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்கள் தான் தலைமை ஏற்று நடத்தி வந்தார்கள். இது பற்றிய ஒரு செய்தி பின்வருமாறு
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்து கண் பார்வை அற்றவராக இருந்த போது அவருடைய மகன் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தையான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லக் கூடியவாரக இருந்தார்கள் இவ்வாறு அழைத்துச் செல்லும் போது வெள்ளிக் கிழமை அதான் ஓசையைக் கேட்கும் போது என்னுடைய தந்தை அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்தார்கள் இவ்வாறு தொடர்ந்து பிராத்தித்து வந்ததை அவதானித்த அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் தந்தையை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நீங்கள் அதான் ஓசையைக் கேட்கும் போது எல்லாம் அஸ்அத் பின் சுராராவிற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதை நான் அவதானிக்கிறேன். அதற்குரிய காரணம் என்று என்று கேட்டார்கள். அப்போது கஅப் (ரலி) அவர்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு வருவதற்கு முன்னர் இவர் தலைமையில்தான் ஜும்ஆவை நிறைவேற்றி வந்தோம். இவரின் மூலம் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டோம். என்று தன்னுடைய மகனுக்குக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களுக்கு முன்னால் ஒரு நபித் தோழர் மூலம் முதலாவது ஜும்ஆ நடத்தப்படுகிறது. இரண்டாவது ஜம்ஆ பஹ்ரைனில் உள்ள ஜவாஸா என்ற இடத்தில் நடைபெற்றது அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு வந்து குபாப் பள்ளியைக் கட்டி அங்கு ஜம்ஆ நடத்திய பிறகு அதன் பிறகு மஸ்ஜிதுன் நபிவியைக் கட்டியது எல்லாம் பின்னர் நடந்த சம்பவங்கள்.
நபி (ஸல்) அவர்கள் இந்த ஜம்ஆவிற்கு முக்கியமான ஒரு அந்தஸ்த்தைக் கொடுத்துள்ளார்கள் நமது பார்வையில் ஜம்ஆ  நாள் என்பது வாரத்தில் ஒரு நாள் தொழுகைக்கும் மட்டும் உள்ளது என்று விளங்கிக் கொண்டிருக்கிறோம். நபி (ஸல்) அவர்களின் பார்வையில் ஜம்ஆவுடைய நாள் என்பது ஒரு பெருநாளாகும் என்று கூறிப்பிட்டுள்ளார்கள். அதனால் தான் வெள்ளிக் கிழமை நாளில் நோன்பு வைப்பதைத் தடைசெய்துள்ளார்கள் எவராவது வெள்ளிக் கிழமை நாள் நோன்பு வைக்க வேண்டும் என்றால் அவர் ஒரு நாள் முந்திய நாளுடன் சேர்த்து  வியாழன் வெள்ளியாக நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஒரு நாள் பின்திய நாளுடன் சேர்த்து வெள்ளி சனியாக நோன்பு வைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் சொல்லும் போது ஏனென்றால் இது ஒரு பெருநாள் அன்றைய நாள் முழுவதும் பெருநாளாக இருந்தால் முந்தி ஒன்றை சேர்த்தோ அல்லது பிந்தி ஒன்றை சேர்த்தோ நோன்பு வைக்கக் கூடாது. ஏளாத்தாள ஒரு பெருநாள் போன்றது வெள்ளிக் கிழமை பொருநாளில் ஒரு சிறிய பகுதி இருப்பதன் காரணமாக அவ்வாறு கூறியுள்ளார்கள் அன்றைய நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள் இதை நாம் விளங்கி வைத்துள்ளோம்.  ஆனால் ஒருவருக்கு குளிப்புக் கடமை ஆகவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைக்காக அவர் குளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 897)
ஆண்களாக இருந்தாலும் பெண்களால் இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கும் வரக்கூடியவர்களாக இருந்தாலும் வராதவர்களாக இருந்தாலும் பருவ வயதை அடைந்தவர்களாக இருந்தால் இஸ்லாத்தில் வாரத்தில் ஒருநாள் குளிப்பது கட்டாயக் கடமையாகும். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் சரி அவர்களிடம் அழுக்கு இருந்தாலும் இல்லா விட்டாலும் வெள்ளிக் கிழமையாவது கண்டிப்பாகக் குளித்து விடவேண்டும் என்று வாரத்தில் ஒருநாள் குளிக்க வேண்டும் என்று சொன்ன ஒரு மார்க்கம் இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கும். மற்ற நாள்களில் குளிக்க முடியும் ஆனால் வாரத்தில் ஒருநாள் குளிப்பது கட்டாயமாகும்.
குளிப்பதை மாத்திரம் சொல்லாமல் அன்றைய தினத்தில் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு எண்ணெய் பூசிக் கொள்வது நறுமணம் பூசிக் கொள்வதுடன் அன்றைய நாள் நன்றாக உணவு உண்ண வேண்டும் என்று கூறுகிறார்கள். இவைகள் எல்லாம் பெருநாளுடைய ஒரு அம்சமாகும். வெள்ளிக் கிழமை நாளில் பைத்தியம் பிடித்தவர்களைப் போன்று தலைவாராமல் அழுக்கான ஆடைகளை உடுத்திக் கொண்டு வரக்கூடாது என்பதை இந்த நபி மொழி நமக்கு கூறுகிறது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். பிறகு எண்ணெய்யோ நறுமணமோ பூசிக்கொள்கிறார். பிறகு அவர் புறப்பட்டு (சேர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்குள் சென்று) தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியேற்க) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 910)
ஜும்ஆ நாளில் ஐவேளைத் தொழுகைகையப் போன்று ஜமாத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமை. யார் ஒருவன் ஜம்ஆவுடைய நாளில் தொழுகைக்கு வராமல் இருக்கிறார்களோ அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டோடு நெருப்பு வைத்துக் கொளுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் ஜமாத் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அந்த அளவுக்கு முக்கியத்துவத்தின் காரணமாகக் கூறுகிறார்கள். மற்றக் கடமைகளும் கடமைகள் தான் ஆனால் இது அவைகளைவிடவும் முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தப்பட்ட கடமையாகும் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ஜம்ஆ என்கிற அத்தியாயத்தில் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
(அல்குர்ஆன் 62:9,10)
பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்.
ஒரு ஜும்ஆவில் இருந்து அடுத்த ஜும்ஆ  வரைக்கும் நம்மிடம் மனிதன் என்ற முறையில் சில தவறுகளை நாம் செய்து விடுவோம் இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ விலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காத வரை. (முஸ்லீம் 394)
கொள்ளையடித்தல் திருட்டு விபச்சாரம், மதுபானம் குடிப்பது போன்ற பெரும் பாவங்களுக்கு இந்த ஜம்ஆவின் மூலம் மன்னிக்கப்படாது. நம்மை அறியாமல் கோள் சொல்வது புறம் பேசுவது போன்ற சிறு பாவங்கள் இதன் மூலம் மன்னிக்கப்படும். அதன் காரணமாக இஸ்லாம் இஸ்லாம் சொல்லக் கூடிய பிரகாரம் ஜும்ஆவிற்கு சென்றால் இந்தப் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்.  பெரும்பாவங்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் நாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்   
தொடரும் இன்ஷா அல்லாஹ்…….
குறிப்பு :
வெள்ளிக்கிழமையின் சிறப்புகளும், சட்டங்களும் என்ற தலைப்பில் சகோதரர் பீ.ஜே அவர்கள் ஆற்றிய ஜும்ஆ உரையின் எழுத்தாக்கமே இந்த தொடர் கட்டுரையாகும். நண்பர் மனாஸ் (பயானி) அவர்கள் இதை எழுத்து வடிவமாக்கியுள்ளார்.

Post a Comment

0 Comments