இந்தியாவில் முதலாவது சுரங்க படிப்புகள் தொடர்பான பல்கலைகழகம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் நாட்டில் புயலை கிளப்பி கொண்டிருக்கும் இவ்வேளையில், சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பான படிப்புகளை வழங்கும் பல்கலைகழகம் இந்தியாவில் இரண்டாவதாக நாட்டின் வடகிழக்கு பகுதிவமேற்கொள்ளப்பட்டு ருகின்றன.யில் ஆஸ்திரேலியா நாட்டின்குயின்ஸ்லாந்து அரசுடன் இணைந்து அமைப்பதற்குண்டான முயற்சிகள் 


இது குறித்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் ராட் சாலமன் குறிப்பிடுகையில், சுரங்க படிப்புகள் தொடர்பான பல்கலைகழகம் அமைப்பதற்கு இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல்கலைகழகம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்படும் என குறிப்பிட்ட அவர் எந்த மாநிலம் என சொல்ல மறுத்து விட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், தெளிவாக சொல்லவேண்டுமென்றால் நாங்கள் இந்தியாவில் சுரங்க பல்கலைகழகத்தை நிறுவப்போவதில்லை. அதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும் ஈடுபடபோவதில்லை. சிறந்த பாடத்திட்டம் மற்றும் தலை சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தரமான கல்வியை வழங்க உள்ளோம், என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் முதலாவது  சுரங்க படிப்புகள் தொடர்பான பல்கலைகழகம், இந்தியா ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த பொழுது, 1926  ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத் என்ற இடத்தில் துவக்கப்பட்டது. 88 ஹெக்டேர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் வழங்கப்படும் படிப்புகளில் பெட்ரோலியம் இன்ஜினியரிங்(பி.டெக் -4 வருடம்), சுரங்க இயந்திர இன்ஜினியரிங்(பி.டெக் -4 வருடம்), மினரல் இன்ஜினியரிங்(பி.டெக் -4 வருடம்) போன்ற படிப்புகள்  உலகத்தரம் வாய்ந்தவை. IIT-JEE., நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களும் இப்பல்கலைகழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இந்தியாவில் கூடுதலாக சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பான பல்கலைகழகம் வரும்பட்சத்தில் தொழிற்துறை மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சியில் சீரான மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Post a Comment

0 Comments