சோனியா, ராகுல் தொகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம்: நீதிமன்றம் அதிர்ச்சி!


உத்தரப்பிரதேசத்தில் விஜபிக்கள் அடிக்கடி விஜயம் செய்யும் மாநிலங்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு உத்தரப்பிரதேச மின்சாரத் துறை மின் தடை அட்டவணையை சமர்பித்தது.
இதில், 6 விஐபி மாவட்டங்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலை அறிந்த நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது.
நீதிமன்றத்தில் சட்டத்தரனி ஒருவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், உத்தர பிரதேசத்தில் 6 விஐபி மாவட்டங்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பிற மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.
எனவே, இதனை நீக்கி மற்ற மாவட்டங்களைப் போல இந்த மாவட்டங்களிலும் மின் தடை நேரம் வகுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை ஏற்ற நீதிமன்றம், 6 மாவட்டங்களில் மின் தடை நேர அட்டவணையை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்ததையடுத்து இன்று அம்மாநில மின்சாரத் துறை அட்டவணையை சமர்ப்பித்தது.
அந்த அட்டவணையில் கன்னௌஜ், எடவாஹ், மணிப்புரி, ராம்புர், அமேதி, ரேபரேலி ஆகிய 6 மாவட்டங்களுக்கும் விஐபிகள் அடிக்கடி வந்து போவதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேதி தொகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் பிரதான தொகுதியாகும். ரேபரேலி தொகுதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியாகும்.

Post a Comment

0 Comments