அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


சென்னை ஸ்தம்பித்தது , அமெரிக்க தூதரகம் அதிர்ந்தது!, கோபத்தில் கொந்தளித்த முஸ்லிம்!


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.
பெண்கள் துடப்பகட்டை, செருப்பு, சானி கரைசல் உடன் வந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.  மேலும்....

மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் கொந்தளிப்பில் குழுமி இருந்தாலும் எந்த வித சிறிய அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பை வெளிப்படுத்தி காவல்துறையினரை ஆச்சிரியத்தில் ஆழ்தியது.
சென்னை நகரமே முற்றுகையினால் பல மணி நேரம் ஸ்தம்பித்து போனது.  போராட்டம் முடிந்த பிறகும் கூட கோபத்தை அடக்க முடியாத முஸ்லிம்கள் கலைந்து செல்லாமல் போராட்ட கலத்திலேயே பல மணி நேரம் தொடர்ந்து இருந்தனர்.
ஒபாமா, ஹிலாரி , பாதிரியார் ஆகியோரின் உருவப்படங்களை முஸ்லிம்கள்  கிழித்து எரிந்தனர்.  மேலும் செருப்பால் அடித்து சானியை தெளித்து ,காரி உமிழ்நதனர்.
கைது செய்ய வேண்டிய காவல்துறை வழக்கம் போல் எங்களால் இந்த கூட்டத்தை கைது செய்ய இயலாது அந்த அளவிற்கு சென்னையில் எங்கும் வசதி இல்லை எனக் கூறி கலைந்து செல்லுமாறு தெரிவித்தது.
ANI,  CNNIBN உள்ளிட்ட international media க்கள் போராட்ட கலத்திற்கு காலையிலயே வந்து காத்திருந்தது குறிப்பிடதக்கது.
நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள்
விரிவான செய்தி உரிய புகைப்படங்கள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...