அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


குட்கா மற்றும் பான் மசாலாவிற்கு தமிழக்ததில் விரைவில் முழுமையான தடை! , சிகிரெட்டிற்கு எப்பொழுது ?


மாநில புகையிலை கட்டுப்பாடு மையம் குட்கா மற்றும் பான் மசாலவிற்கு தடை விதிக்கு மாறு மாநில அரசிற்கு பரிந்துறை செய்துள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு உயர் மட்ட அளவில் இந்த இரண்டையும் தடை செய்ய ஆலோசித்து வருகின்றது.
கடந்த 2001 ஆம் ஆண்டு குட்கா மற்றும் பான் மசாலவிற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டத்தில் இடம் இல்லாததால் இதை முழுமையாக அமல்படுத்து முடியவில்லை.
”தற்போது உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு” சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பப்பட்டுள்ளது. அதில் Section 2.3.4 படி குட்கா மற்றும் பான் மசாலாவை முழுமையாக தடை செய்ய வழி வகை உள்ளதாக மாநில புகையிலை கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டத்தில் ”ஒரு பொருள் உடலுக்கு பாதிப்பு தரும் எதையும் உள்ளடக்கி இருக்கக் கூடாது. புகையிலை மற்றும் நிகோடின் எந்த உணவு பொருளிலும் இடம் பெறக் கூடாது” எனக் கூறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்கள். (“a product [is] not to contain any substance which may be injurious to health: Tobacco and nicotine shall not be used as ingredients in any food products.”)
இன்றைக்கு இவர்கள் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் மனிதனை படத்தை இறைவன் இதை திருமறையில் அழகாக குறிப்பிடுகின்றான்.
”உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!” நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். 2:195
இங்கு ஒரு வேடிக்கையான விசயம் என்னவெனில் புகையிலை கலந்துள்ள பொருளை பயன்படுத்த மற்றும் விற்க தடை விதிக்க அரசு ஆலோசித்து வருகின்றது.
அதே நேரத்தில் புகையிலையையே (சிகிரெட், பீடி) பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அது பற்றி எந்த அரசு மையங்களும் வாய்திறக்கவில்லை.
சிகிரெட் விலையில் 58 சதவிகிதம் மத்திய மாநில அரசிற்கு வரியாக போகின்றது.
பீடியில் 38 சதவிகிதம் மத்திய மாநில அரசிற்கு வரியாக போகின்றது.
எதில் அரசிற்கு அதிக லாபம் வருகின்றதோ அதை கண்டு கொள்வதில்லை. பீடி சிகிரெட்டினால்  பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பு வந்தாலும் அதை அரசு அதை பொருட்படுத்துவதில்லை.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு புகையிலையினால் ஒரு மில்லன் நபர்கள் இறந்து போகின்றனர் என சமீபத்திய சர்வே தெரிவிக்கின்றது.
இதில் மற்றுமொரு வேடிக்கையான விசயம் என்னவெனி்ல் ”உணவு பொருளில் உடலுக்கு பாதிப்பு தரும் எதுவும் இருக்கக் கூடாது என்பது இந்திய சட்டம்” ஆனால் உடலையும் மனிதன் வாழும் சமுதாயத்தையும் சீரழித்து கொண்டிருக்கும் சாரயத்தை அரசே ஏற்று விற்பனை செய்துகொண்டிருகின்றது.
மஹாராஷ்ட்ரா அரசு புகையிலை பொருட்களை தயாரிப்பது , விற்பது உள்ளிட்டவைகளுக்கு சமீபத்தில் தடை விதித்தது. உடனே வரிந்து கட்டிக் கொண்டு சிலர் இந்த தடையை நீக்க வேண்டும் என மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து இன்று மும்பை உயர் நீதி மன்றம் ”மஹாராஷ்ட்ரா அரசு கொண்டுவந்துள்ள தடையை நீக்க முடியாது” என மறுத்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடதக்கது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...