அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழ‌க்கரையில் 'சீதேவி' போலி ம‌ந்திர‌வாதி கைது - காவ‌ல் நிலைய‌த்தில் த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத்தின‌ர் புகாரின் பேரில் நடவடிக்கை !பொள்ளாச்சியை சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவரது மகன் முகமது இப்ராகிம் (வயது 39)  இவர் பொள்ளாச்சி 'மந்திர'மூசா, சீதேவி 'மந்திர'மூசா என்ற (பட்டங்களுடன்??) பட்டப் பெயர்களுடன் கடந்த 20 ஆண்டுகளாக கீழக்கரையில் உலா வந்திருக்கிறார். கீழக்கரை நகரின் பெரும்பாலான பகுதிகளில், இந்த ஆசாமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். 'இறை அருள் மருத்துவம்' என்ற பெயரில் பேய்,பிசாசுக‌ளை விசேஷ பூஜைகள் செய்து விரைந்து விர‌ட்டுவ‌தாக‌வும், செய்வினை இருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறி, ஆண்கள் இல்லாத வீடுகளுக்குச் சென்று  இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக  பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டும் நில்லாமல், அதனை வீடியோவில் படம் பிடித்து அதனை வெளியிட்டு விடுவதாகவும்  மிரட்டி பெண்களிடம் இருந்து பெருமளவு பணம் பறித்து ஜே .. ஜே... என்று அமோகமாக, இராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த ஆசாமி, கீழக்கரை, ஏர்வாடி போன்ற இடங்களில் வசிக்கும் குடும்ப பெண்களிடம் தான் மந்திரவாதி என்றும், நோய்களை தீர்த்து வைப்பேன் என்று பேசி  பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளிடம் கூறினர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு நிர்வாகி ஹாஜா முஹைதீன், கீழக்கரை போலீசில் புகார் செய்தார். அதில் போலி மந்திரவாதி முகமது இப்ராகிம் என்பவர் பெண்களை செல்போனில் படம் எடுத்து மிரட்டி வருவதாக கூறி இருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லமணி, கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி 'சீதேவி' 'மந்திர'மூசாவை கைது செய்தனர். மேலும் அவர் இந்த குற்ற செயல்களுக்காக பயன்படுத்தி வந்த நான்கு சக்கர வாகனமும் பறி முதல் செய்யப்பட்டது.

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கணக்கில்லாத வகையில் ப‌ல‌ரையும் ஏமாற்றி வ‌ந்த‌ இவ‌ருக்கு க‌டும் த‌ண்டனை வழ‌ங்க‌ வேண்டும் என்றும் ஜாமீனில் வர இயலாத வழக்குகளை இந்த போலி மந்திரவாதி மீது பதிந்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் காவ‌ல் நிலைய‌த்தில் குவிந்த‌ன‌ர்.

நன்றி :கீழை இளையவன்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...