அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரையில் 'போலி மூஸா' வை விரைந்து கைது செய்த காவல் துறையினருக்கு நன்றி - TNTJ வினர் நகர் முழுதும் சுவரொட்டி மூலம் அறிவிப்பு !


கீழக்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த 'சீதேவி ஆலிமூசா' என்கிற முகமது இப்ராகிம் (வயது 39)  என்பவர் 'இறை அருள் மருத்துவம்' என்ற பெயரில் பேய், பிசாசுக‌ளை விசேஷ பூஜைகள் செய்து விரைந்து விர‌ட்டுவ‌தாக‌வும், செய்வினை இருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறி, ஆண்கள் இல்லாத வீடுகளுக்குச் சென்று  இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்கள் கீழக்கரை காவல் நிலையத்தில் ஆதரங்களுடன் புகார் செய்தனர். அதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த  இன்ஸ்பெக்டர் திரு .கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு. செல்லமணி, திரு. கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி பொள்ளாச்சி மந்திரமூசாவை கைது செய்தனர்.


இந்நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்த கீழக்கரை காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்கள் நகர் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதனை பாதசாரிகள் நின்று படித்து விட்டு, தாங்களும் காவல் துறைக்கும், TNTJ வினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக, தெரிவிவிக்கின்றனர். இது வெறுமெனே... நன்றி தெரிவிக்கும் சுவரொட்டியாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் அமைந்திருப்பதாக இருக்கிறது.

நன்றி :கீழை இளையவன்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...