அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஒருநாள் நிர்வாகக்குழு கூட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்......அல்லாஹ்வின் உதவியால்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் புதிய நிர்வாகம் கடந்த 8.5.2015 அன்று தேர்வு செய்யப்பட்டதிலிருந்து வாரந்திர நிர்வாகக்குழு கூட்டம் பிரதி வாரம் வியாழக்கிழமை பஜ்ர் தொழுகைக்குப்பின் நடைபெற்றுவருகிறது.
அதன் முதல் நிர்வாக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 30.5.2015 சனிக்கிழமை அன்று மாதாந்திர ஒருநாள் நிர்வாகக்குழு கூட்டம்  நடைபெற்றது.
கிளைத்தலைவர் சகோதரர் தினாஜ்கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருநாள் நிர்வாகக்குழுவின் முதல் அமர்வு காலை 10.00மணிக்கு துவங்கி பகல் 1.00மணிக்கு நிறைவடைந்து.இதில் இந்த மாதத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு அழைப்புப்பணியை இன்னும் வீரியப்படுத்த முடிவு செய்யப்பட்டதுடன் வரவு,செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப்பின் இரண்டாம் அமர்வு சரியாக 2.30 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்தது.இடையில் அஸர் தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டது
இரண்டாம் அமர்வில் ஆண்களுக்கான மக்தப் மதரசாவை இன்னும் சிறப்பாக கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் மற்றும்
ரமழானுக்கான செயல்திட்டங்கள்,கேபிள்டிவி நிகழ்ச்சிகளை மேம்படுத்துதல்,ஆகிய முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டதுடன்  ரெகுநாதபுரத்தில் 1.5.2015 திங்கள்கிழமை நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்......

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...