அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மாற்று மத தாஃவா

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 13.8.2015 வியாழக்கிழமை மஃரிபுக்குப்பின் மாற்று மத தாஃவா(அழைப்புப்பணி)செய்யப்பட்டது.
கிறிஸ்துவ சகோதரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான பண்ணாட்டார் தெருவில்(மேலத்தெரு)வசிக்கும் சகோதர,சகோதரிகளுக்கு "அபுபக்கர் சித்தீக்MISC" அவர்கள் இஸ்லாத்தையும்,இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும்,உண்மைமார்க்கம் இஸ்லாம்தான் என்பதையும் மிக அழகான முறையில் எடுத்துக்கூறினார்.

பிரச்சாரத்தை துவக்கும்போது  5 நபருக்கும் குறைவானவர்களே இருந்தனர் பிறகு சிறிது நேரத்திலேயே சுமார் 25 க்கும் அதிகமான கிறிஸ்துவசகோதர,சகோதரிகள் அந்த இடத்தில் குழுமிவிட்டனர்.

இந்த பிரச்சாரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களும் அளிக்கப்பட்டது. அத்தோடு அவர்களுக்கு சகோதரர் பீஜே எழுதிய"இயேசு இறைமகனா?" "இதுதான் பைபிள்" "பைபிளில் நபிகள் நாயகம்" "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"ஆகிய புத்தகங்கள் 19 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.(கையிலிருந்த புத்தகங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் வெறும் 19 நபர்களுக்குத்தான் நம்மால் கொடுக்க முடிந்தது).
கீழக்கரை வரலாற்றில் இத்தகைய பிரச்சாரம் நடைபெறுவது இதுவே முதல்முறை எனலாம்.
இந்த பிரச்சாரத்தின் போது அந்த கிறிஸ்துவ சகோதரர்கள் அளித்த வரவேற்பும் அவர்களின் ஆர்வமும் நமது தாஃவா அணியினரை மிகவும் உற்சாகப்படுத்தியள்ளது. இதன் விளைவாக பிரதி வாரம் வியாழன் தோறும் மாற்று மத தாஃவா செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.....

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...