அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மருத்துவமணை தாஃவா

அல்லாஹ்வின் உதவியால்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 19.8.2015 புதன்கிழமை அஸருக்குப்பின் அரசு மருத்துவமணையில் தாஃவா(அழைப்புபணி) செய்யப்பட்டது.
இதில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த 13 மாற்று மத சகோதர,சகோதரிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி அவர்களின் நலம் விசாரித்து நோய் குணமடைய அல்லாஹ்விடம் பிராத்தனை செய்ததோடு நமது தாஃவா அணியினர் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துக்கூறி இஸ்லாமிய அழைப்புபணி செய்தனர்.
அவர்களுக்கு "ஓர் இறைக்கொள்கை" என்ற புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் உதவியால்.....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 17.8.2015 திங்கள்கிழமை மஃரிபுக்குப்பின் நடுத்தெரு வில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
நடுத்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி பெண்மணி அம்மன் போன்று அலங்காரம் செய்துகொண்டு மக்களுக்கு குறி சொல்வதாகவும் பால்கிதாபு பார்ப்பதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் இப்பிரச்சாரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தப்பெண்மணியின் வீட்டுக்கு நேர் எதிரில் நின்று சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் "ஜோதிடம் பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியின் இறுதியில் பால்கிதாபு மற்றும் குறிசொல்லல் ஆகியவற்றை உண்மை என்று நிருபித்தால் அந்த பெண்மணிக்கு 1கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 16.8.2015 ஞாயிற்றுக்கிழமை மஃரிபுக்குப்பின் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் சித்திக் MISC அவர்கள் "அல்லாஹ்வின் அருளை தேடுவோம்"....என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....மெகாஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் உதவியால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 15.8.2015 சனிக்கிழமை இஷாவிற்க்குப்பின் புதுத்தெரு பகுதியில் 4 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....
பீச் தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 14.8.2015 வெள்ளிக்கிழமை அஸருக்குப்பின் கடற்கரையில்(பீச் தாஃவா)அழைப்புபணி செய்யப்பட்டது.
இதில் ஒரு போலிஸ்காரர் உட்பட ஏழு நபர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துகூறப்பட்டது.அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்?""இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்"ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

மாற்று மத தாஃவா

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 13.8.2015 வியாழக்கிழமை மஃரிபுக்குப்பின் மாற்று மத தாஃவா(அழைப்புப்பணி)செய்யப்பட்டது.
கிறிஸ்துவ சகோதரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான பண்ணாட்டார் தெருவில்(மேலத்தெரு)வசிக்கும் சகோதர,சகோதரிகளுக்கு "அபுபக்கர் சித்தீக்MISC" அவர்கள் இஸ்லாத்தையும்,இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும்,உண்மைமார்க்கம் இஸ்லாம்தான் என்பதையும் மிக அழகான முறையில் எடுத்துக்கூறினார்.

பிரச்சாரத்தை துவக்கும்போது  5 நபருக்கும் குறைவானவர்களே இருந்தனர் பிறகு சிறிது நேரத்திலேயே சுமார் 25 க்கும் அதிகமான கிறிஸ்துவசகோதர,சகோதரிகள் அந்த இடத்தில் குழுமிவிட்டனர்.

இந்த பிரச்சாரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களும் அளிக்கப்பட்டது. அத்தோடு அவர்களுக்கு சகோதரர் பீஜே எழுதிய"இயேசு இறைமகனா?" "இதுதான் பைபிள்" "பைபிளில் நபிகள் நாயகம்" "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"ஆகிய புத்தகங்கள் 19 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.(கையிலிருந்த புத்தகங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் வெறும் 19 நபர்களுக்குத்தான் நம்மால் கொடுக்க முடிந்தது).
கீழக்கரை வரலாற்றில் இத்தகைய பிரச்சாரம் நடைபெறுவது இதுவே முதல்முறை எனலாம்.
இந்த பிரச்சாரத்தின் போது அந்த கிறிஸ்துவ சகோதரர்கள் அளித்த வரவேற்பும் அவர்களின் ஆர்வமும் நமது தாஃவா அணியினரை மிகவும் உற்சாகப்படுத்தியள்ளது. இதன் விளைவாக பிரதி வாரம் வியாழன் தோறும் மாற்று மத தாஃவா செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.....


மருத்துவமணை தாஃவா

அல்லாஹ்வின் உதவியால் ..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 12.8.2015 புதன்கிழமை அஸருக்குப்பின் கீழக்கரைஅரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் 15 மாற்று மத சகோதரர்கள் உட்பட16 உள் நோயாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கி நலம்விசாரித்ததோடு ஆறுதலான வார்த்தைகளும் கூறி அவர்களுக்காக துஆ செய்ததோடு அழைப்புப்பணியும் செய்யப்பட்டது.

இந்த அழைப்பணியின் போது நோயால் பாதிக்கப்பட்டள்ள சில சகோதரர்கள் நம்மிடம் கூறியது.. "நேற்றுவரை மனசோர்வுடன் இருந்த எங்களுக்கு நீங்கள் கூறியஇந்த வார்த்தைகள் எங்களுக்கு புத்துணர்ச்சியையும்,புதுத்தெம்பையும் ஏற்படுத்தியள்ளது".

அவர்களின் இந்த கூற்று அழைப்புபணிக்கு சென்ற சகோதரர்களுக்கு பிரதி வாரம் தோறும் புதன்கிழமை மருத்துவமணை தாஃவா செய்வது என்று முடிவு எடுக்க உறுதுணையாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்......


தனிநபர் தாவா

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 11.8.2015 செவ்வாய் கிழமை மஃரிபுக்குப்பின் தனிநபர் தாவா(அழைப்புபணி) செய்யப்பட்டது.
இதில் சகோதரர் அபுபக்கர் சித்தீக் MISC அவர்கள் 1 மாற்று மத சகோதரர் உட்பட11 நபர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைத்தார்.அல்ஹம்துலில்லாஹ்....Related Posts Plugin for WordPress, Blogger...