சிறப்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக இன்று இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பெண்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக இன்று இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பெண்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் சுஜா அலி MISc அவர்கள் "கலாச்சார சீரழிவும் பெண்களின் பாதுகாப்பும்" என்ற தலைப்பில், இன்று நாடு முழுவதும் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் சம்பந்தமாக எடுத்து கூறி அதில் பாதுகாப்பாக வெற்றி நடை போடுவது எப்படி என்று அனைவருக்கும் மனதில் படும்படி உரையை அமைத்து கொண்டார்.
அதனை தொடர்ந்து சகோதரி. பிஸ்மி நிஸா அவர்கள் "அன்பான மனைவி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரி. யாஸ்மின் ஆலிமா அவர்கள் ஜனாஸாவின் சட்டங்களை நபிகளார் கட்டி தந்த முறையில் பயிற்சி அளித்தார்கள் மேலும் ஜனாஸாவை குளிப்பாட்டும் போது எத்தனை நபர்கள் வரை நிற்க வேண்டும் ? குடும்பத்தாருடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவதில் யார் யாரெல்லாம் முன் வர வேண்டும் ? என்பது போன்ற பல சட்டங்களை பயிற்ச்சியின் போது வழங்கினார்.
இதில் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹதுலில்லாஹ்!!!



0 Comments