அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


சாய்பாபாவுக்கு இரங்கல் தெரிவித்த ஜவாஹிருல்லாஹ்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது..
நீங்கள் மேல் காணும் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.முழுமையாக பார்க்க


சாய் பாபா என்பவர் பல சமூக சேவைகளை செய்தார் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.மாற்று மதத்தை சார்ந்தவர் இறந்துவிட்டால் அவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் எந்த விதத்திலும் தவறில்லை ஏனெனில் ஒரு யூதருடைய ஜனாஸா கொண்டு செல்லும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எழுந்து நின்றிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் நோய் வாய்ப்பட்டவர் எந்த மதத்தை சார்ந்தவராயினும் அவரை போய் பார்த்து விசாரித்து இருக்கிறார்கள்.எனவே மாற்று மதத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது தவறு இல்லை.ஆனால் இந்த சாய் பாபா என்பவர் யார் ? தன்னை கடவுள் என்றும் தன்னை வழிப்படுங்கள் என்று சொன்னவர். இப்படிப்பட்ட்வருக்கும் இவரை கடவுள் என்று நம்பி இருக்கக் கூடியவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பது அவர்களின் இணைக்கற்பிப்பை ஆதரிப்பதாகவே இருக்கிறது.ஃபிர்அவனுடைய செயலை செய்தவருக்கும் அவருடைய பக்தர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பது எந்த வகையிலும் ஞயாயம் இல்லை.


ஏதாவது ஒரு பெரிய புள்ளி(மக்கள் செல்வாக்கு உள்ள மனிதர்) இறந்துவிட்டால் அதை அரசியலாக்கி அதில் தன்னையும் தன் கட்சியையும் அடையாளம் காட்டிக் கொள்வது எல்லா அரசியல்வாதியிடம் இருக்கும் ஒரு பண்பு.ஈமான்,மறுமை மற்றும் இஸ்லாமிய கொள்கை தான் முக்கியம் அதற்க்கு பின் தான் அரசியல் என்ற நினைக்கக் கூடிய ஒரு முஸ்லிம் இப்படி ஒரு பண்பை பின்பற்றலாமா?இஸ்லாத்தை மறந்து அரசியல் சாக்கடையில் கலந்துவிட்டதை மீண்டும் நிருபித்து இருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா.இப்படிப்பட்டவர்களை நம்பினால் முஸ்லிம் சமுதாயத்தின் நிலைமை என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

மேலும் நாளை நரேந்திர மோடி நித்யானந்தர் போன்றவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து இவர் மட்டும் வழிகேட்டுக்கு செல்லாமல் இவரை நம்பி வந்த ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்துதான் வழிகேட்டுக்கு கொண்டு செல்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது .

நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய வழிமுறையை செய்கிறாரோ அவருக்குப் பின் அவ்வாறு செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடைகின்றது. இவர்களது கூலிகளில் இருந்து எதுவும் குறைக்கப்படாது. யார் இஸ்லாத்தில் ஓர் தீய நடைமுறையைச் செய்கிறாரோ பின்னர் அதுபோல் செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடை கின்றது. இவர்களது பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப்படாது.’ (இப்னுமாஜா),முஸ்லிம் 1848 அறிவிப்பாளர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி).

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...