அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாத்தில் மீலாது விழா என்பது கிடையாது...



இஸ்லாத்தில் மீலாது விழா என்பது கிடையாது...

ஏனெனில்! நபிகள் நாயகம் அவர்கள் தமக்குப் பிறந்த நாள் கொண்டாடவில்லை! நான்கு கலீஃபாக்களும் கொண்டாடவில்லை! நான்கு இமாம்கள் உள்ளிட்ட ஏராளமான இமாம்களும் மீலாது விழா கொண்டாடவில்லை.

மாறாக அப்துல்லாஹ்வின் மகனாகப் பிறந்த முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்டதைத் தான் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த இரவு லைலத்துல் கத்ர் எனப்படுகிறது.

அந்த இரவு தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று இஸ்லாம் கூறுகிறது.

முஹம்மது நபி அவர்கள் பிறந்து இறைத்தூதராக நியமிக்கபடா விட்டால் அவர்களுக்கு இந்த வரலாறு இருந்திருக்காது.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கொண்டாடுவதும் மற்ற எவருடைய பிறந்த நாள் கொண்டாடுவதும் இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாதது.

பிறந்த நாளுக்கு ஏதாவது மதிப்பு இஸ்லாத்தில் இருந்திருந்தால் இஸ்லாமிய வரலாறு நபிகள் நாயகத்தின் பிறப்பிலிருந்து ஆரம்பித்திருக்கும். ஆனால் இஸ்லாமிய ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53 ஆம் வயதிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதாவது அவர்கள் பிறந்த ஊரைத் துறந்து மதீனாவுக்குப் புறப்பட்டது தான் ஹிஜ்ரி ஆண்டின் ஆரம்பம். இதிலிருந்தே பிறந்த நாளுக்கு இஸ்லாம் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை என்பதை அறியலாம்.

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. 

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம்
கற்றுத்தந்திருக்கின்றது.இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை.
கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம்
இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்னதத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு
என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம்
பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் 
குறிப்பிடுகிறீர்கள்?"  என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேறெவரை?" என்று பதிலலித்தார்கள். புகாரி (3456)

எனவே இஸ்லாத்தில் மீலாது விழா மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிடையாது இது தவறு!..இதை நாம் கை விடவேண்டும்.


பகிரங்க அறைகூவல் :
இஸ்லாத்தில் மீலாது விழா மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது சரி என்று கூறி! 

தமிழக இஸ்லாமிய மக்களை நரகத்தில் தள்ளும் வேலையினை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து செய்பவர்களே! நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடன்  (TNTJ) பகிரங்க விவாதம் செய்ய நீங்கள் தாயாரா?


விஸ்வரூபம் படத்திற்கு, தமிழகம்,புதுவை,ஐதராபாத்,துபாய் இலங்கை தொடர்ந்து ......தடை .அல்ஹம்துலில்லாஹ்!


விஸ்வரூபம் படத்திற்கு, தமிழகம்,புதுவை,ஐதராபாத்,துபாய் இலங்கை தொடர்ந்து ......தடை .அல்ஹம்துலில்லாஹ்!




விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!

தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்!

சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.

இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.

இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.

சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.

உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு நன்றி!

சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.

உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து TNTJ கொடுத்த கடிதம்: http://www.tntj.net/128361.html

திரைப்படத்தை கண்டித்து சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்:http://www.tntj.net/128369.html

புதுச்சேரியிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை!
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்கக் கோரி நேற்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் புதுச்சேரி மாநில முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்!
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வரிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அளித்த
புகார்: http://www.tntj.net/128439.html

விஸ்வரூபம் படத்தை கேரளாவில் தடைசெய்ய வேண்டும்” , TNTJ கேரள மண்டல பத்திரிக்கை செய்தி!

விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என நேற்று (23-1-2013) தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கேரளா மண்டலம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும் என அந்த செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி கேரள பத்திரிக்கைகளில் வெளியானது.

தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி : இலங்கையில் விஸ்வரூபம் 
திரைப்படத்திற்கு தடை! – அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தையும்முஸ்லிம்களையும் தவறாக சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக ஜனாதிபதிஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியோரது கவணத்திற்கு விஸ்வரூபம் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.
இறுதியாக இன்று காலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலமாக இன்று ஜனாதிபதியுடன் முஸ்லிம் எம்.பி க்கள் நடத்திய சந்திப்பில் இது தொடர்பாக பேசும்படி வேண்டிக் கொண்டதுடன் விஸ்பரூபத்தைத் தடை செய்வது குறித்த ஆவணங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் மேற்கொண்ட அவசர சந்திப்பில் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் செய்திகளைக் கேட்டறிந்த திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரைப்படம் என்பது பொழுது போக்காக இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை நிந்தனை செய்வதாக இருக்கக் கூடாது. இதுவரை இலங்கையில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு நாம் இந்த நிபந்தனையைத் தான் விதித்துள்ளோம். ஆகவே இது தொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும்’ என்றும் தெரிவித்ததுடன் திரைப்படத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாகவும்,திரைப்படத்தின் காட்சிகளை முஸ்லிம் தலைவர் மற்றும் புத்தி ஜீவிகளுக்கு திரையிட்டுக் காட்டிய பின்பே தொடர்ந்தும் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்.
இதே வேலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக நாளை 25.01.2012ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நடை பெறவிருந்த சினி சிட்டி திரையரங்கம் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றது.


விஸ்வரூபம் படம் துபையில் வெளியாகவில்லை!

முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள கமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (24-1-2013) துபையில் வெளியாக இருந்து விஸ்வரூபம் படத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. National Media Council அதிகாரிகள் இது குறித்து கூறுகையில்
”இந்த படத்தில் முஸ்லிம்கள் கொலை செய்வது போன்றும் குண்டு வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இது மிகவும் சென்சிடிவ் ஆன விசயம், இந்த படத்தை நாங்கள் இன்னும் review செய்து முடிக்கவில்லை இது குறித்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும்”எனக் கூறியுள்ளனர்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ருபாய் 10,000 மருத்துவ உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 04.12.2012 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளை மற்றும் கீழக்கரை 500Plot கிளை சார்பாக டெங்கு  காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட  ஏழை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக  ருபாய் 10,000 அவர் தந்தையிடம்  வழங்கப்பட்டது.. 


TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 04-12-2012 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோதரர்:- "இக்ராமுல்லாஹ் கான் " அவர்கள் "பிராத்தனை " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்................!


”பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6” கேப்டன் செய்தி டிவியில் விஹெச்பியுடன் பி.ஜே  அவர்கள் நேரடி விவாதம் 

டிசம்பர் 6 (வியாழன் 6-12-2012) மாலை 4 மணி முதல் 5 மணி வரை கேப்டன் செய்தி டிவியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த நேரடி ஒளிபரப்பில்  VHP தலைவர்களுடன் பி.ஜே அவர்கள் விவாதிக்க உள்ளார்கள் 

இன்ஷா அல்லாஹ் கேப்டன் செய்தி டிவியில் இந்த நேரடி ஒளிபரப்பை காணத்தறாதீர்கள்

பி.எஸ்.என்.எல்.லைத் தொடர்ந்து ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தின ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள்!


கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏகத்துவ காலர் ட்யூன்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்திய செய்தியை உணர்வு இதழில் வெளியிட்டிருந்தோம்.
பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள ஏகத்துவ காலர் ட்யூன்கள் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
அதைத்தொடர்ந்து தற்போது வோடோஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
பீஜே அவர்கள் உரையாற்றிய, “இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பிலான உரையிலிருந்து 20 தலைப்புகள் காலர் ட்யூன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வோடோஃபோன் வாடிக்கையாளர்கள் காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய:
கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் விரும்பும் காலர் ட்யூன் கோடு நம்பரை உங்கள் மொபைலில் டைப் செய்து டயல் பட்டனை பிரஸ் பண்ணினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும்.
ஐடியா வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய:
DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு கீழ்க்கண்ட பட்டியலில் தாங்கள் விரும்பும் தலைப்பிலான காலர் ட்யூன் கோடு நம்பரை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும்.
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக தாங்கள் இருப்பீர்களானால், கீழ்க்கண்ட தலைப்புகளில் தங்களுக்கு விருப்பமான தலைப்பிற்கான கோடு எண்ணை 56700 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும்.
குறிப்பு : பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஏகத்துவ காலர் ட்யூன் கோடு நம்பர்கள் ஒரே கோடு நம்பர்கள்தான்.
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 56700 என்ற எண்ணுக்கும், ஐடியா வாடிக்கையாளர்கள் DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு குறிப்பிட்ட கோடு நம்பர்களை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றில் வெகுவிரைவில்
ஏகத்துவ காலர் ட்யூன்கள் அறிமுகம்:
பி.எஸ்.என்.எல், வோடோஃபோன், ஐடியா ஆகிய செல்பேசி நிறுவனங்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் கூடிய விரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலர் டியுன் கோடுகள்

உணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-14 நவ 30 – டிச 06 Unarvu Tamil weekly

குப்பைக் கூடைக்கு போன மதச்சார்பின்னை
அதிரையில் பயங்கரம் கல்லூரி மாணவர் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச் செயல்!
பால்தாக்ரே மணரம் மராட்டிய மண்ணருக்கு நிம்மதி தருமா?

பெண் கல்வியும், பெற்றோரின் நிலையும்.



எனது பிள்ளை டாக்டராக வரவேண்டும். என் பிள்ளை தற்போது பொறியியல் துறையில் படித்துக் கொண்டிருக்கின்றான். எனது தம்பி இன்னும் ஓரிரு மாதத்தில் ஆசிரியராக பட்டம் பெற்றுவிடுவான். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகளை எப்படியாவது ஒரு பட்டதாரியாக ஆக்கிவிட வேண்டும். இது போன்ற வார்த்தைகளை பெற்றோர்கள் அடிக்கடி சொல்வதை நாம் தினமும் கேட்டு வருகின்றோம்.
காரணம் தங்கள் பிள்ளைகளை சமுதாயத்தில் படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற அவாதான் இவர்களை இப்படி பேசவும், அதற்காக பாடுபடவும் தூண்டுகின்றது. இதே நேரம் கல்விக்காக எதையும் செய்யத் துணியும் பெற்றோர் தனது பிள்ளை ஒழுக்கத்துடன் கூடிய சிறப்பான கல்வியைத் தான் பெற்றுக் கொள்கின்றானா என்பதை கவணிக்க தவறிவிடுவதுதான் கவலைக்குறிய விஷயமாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...