(தமிழுலகின் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த ரமழான் மாதம் முழுவதும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் பேசிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவை எழுத்தில் தரும்படி பலரும் வேண்டிக் கொண்டதால் காலத்தின் தேவை கருதி தொடராக தருகிறோம்)
இஸ்லாமிய மார்க்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் முழுமையாகவும்,தெளிவாகவும்,அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அனுகக் கூடிய ஒரு மார்க்கம்.
அந்த அடிப்படையில் குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் என்ன நடை முறைகளைகளை சொல்லித் தருகிறது என்பதை தெளிவு படுத்துவதற்காக இந்தத் தலைப்பு தெரிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்காண காரணம் என்னவெனில் நம்முடைய சமுதாயத்திலலே முஸ்லீம்களாக இருந்தாலும்,முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய குடும்ப அமைப்பு பாரதூரமான முறையில் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.இவையணைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய குடும்ப அமைப்பு முறைமை அவர்களுக்கு தெரியாத காரணத்தினாலும்,எடுத்து சொல்லப் படாத காரணத்தினாலும் தான் உண்டாகிறது.
முதலாவதாக..............................
அல்லாஹ் உலகில் எந்த படைப்பை படைத்திருக்கிறானோ அவை அனைத்தும் ஒன்றிலிருந்து இன்னொன்றை உற்பத்தி செய்யக் கூடியதாகவே உள்ளது.
மனிதன் படைக்கும் படைப்பிற்கு அந்த ஆற்றல் இல்லை.
ஒரு பேனாவை ஒரு மனிதன் படைத்தால் (கண்டுபிடித்தால்)அது இன்னொரு பேனாவை பெற்றெடுக்காது.ஒரு தொலை பேசியை கண்டுபிடித்தால் அது இன்னொரு தொலை பேசியை பெற்றெடுக்க முடியாது.
ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தான் செய்ய வேண்டும்.
ஆனால் இறைவன் ஒரு ஜோடி மனித இனத்தை உருவாக்கினான் அதிலிருந்து பல கேடி மக்கள் உருவாக்கபட்டு இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது போல்தான் மனிதனல்லாத மற்ற மிருகங்களாக இருந்தாலும் ஒரே ஒரு ஜோடியில் இருந்துதான் அத்தனையும் பல்கிப் பெருகியுள்ளன.
தாவதங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு விதையின் மூலமாகத் தான் இறைவன் அனைத்தையும் உருவாக்குகிறான் ஆனால் மனிதனால் இப்படி இறைவனைப் போல் செய்ய முடியாது அவன் தனித்தனியாகத் தான் எதையும் உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்,பெண் என்ற இரண்டு வகைகள் இருக்கிறது.
தாவரங்களாக இருந்தாலும் ஆண் பூவும் இருக்கிறது பெண் பூவும் இருக்கிது அந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் தான் காய்க்க முடியும்.
மிருகங்களாக இருந்தாலும் ஒன்றோடு மற்றையது இணைந்தால் தான் பல்கிப் பெருக முடியும்.
ஆனால் மனிதனுக்கு மாத்திரம் தான் மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத குடும்பம் என்ற ஒன்றை இறைவன் ஏற்பாடு செய்திருக்கிறான்.
ஆடுகளில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு,மாடுகளில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு இப்படி அனைத்து உயிரினத்திலும் ஆண்,பெண் என்ற இரண்டு வகை உண்டு இரண்டும் கலப்பதின் மூலம் இணவிருத்தி செய்து கொள்கின்றனவே தவிர மனிதனைப் போல் குடும்பம் என்றொன்ரு ஏற்படுத்தப் பட்டு ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமந்து கொள்வது இல்லை.
ஒரு பெண் ஆடு படும் கஷ்டத்தில் ஆண் ஆடு பங்கெடுத்துக் கொள்ளாது. ஒரு பெண் ஆடு ஆண் ஆட்டின் மூலம் கற்பமாகி அதனது கருவை சுமந்து கொண்டிருக்கும் ஆனால் அந்த சுமையில் ஆண் ஆட்டுக்கு எந்த பொருப்பும் இருக்காது. பொருப்பெடுப்பதற்குறிய அறிவும் அவைகளுக்கு இல்லை.
ஆனால் மனிதன் சிந்திக்கின்றவனாக இருப்பதினால் இதைப் பற்றி தெளிவாக சிந்திக்கின்றான்.இதனால் தான் ஒரு பெண்ணைப் பற்றி சிந்திப்பவனாக ஆண் இருக்கிறான்.
அதனால் தான் குடும்பம் என்றொரு கட்டுக் கோப்புக்குள் மனிதன் இருக்கிறான்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,யாரோடு வேண்டுமானாலும் வாழலாம் என்றொரு நிலை இருக்குமென்றால் பெண்ணினத்தின் கஷ்டத்தை,சுமையை பெண்கள் மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.ஆண்கள் அதில் எந்த ஒரு பகுதியையும் ஆண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அதை தவிர்ப்பதற்காகத் தான் ஆதி காலத்திலிருந்தே,ஆதம் நபியின் காலத்திலிருந்தே குடும்பம் என்றொரு முறையை இறைவன் உருவாக்கியிருக்கிறான்.
ஆதம் நபியவர்களைப் படைத்து,அவருக்குத் துணையாக ஹவ்வா அவர்களையும் படைத்து அவர்கள் இருவரின் மூலம் மனிதனை பல்கிப் பெருக்கி ஒருவருக்கு மற்றவர் துணையாக இருப்பதற்காக அவர்களை குடும்பமாக இறைவன் மாற்றினான்.
ஆனால் இன்றைய நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்பை,சீர்குழைப்பதற்காக,இல்லாமலாக்குவதற்காக,அழித்தொழிப்பதற்காக, பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறது.
குடும்பம் என்றொன்ரு தேவையில்லை,கணவன்,மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பம் எப்படி சிதைகிறது?
குடும்பம் என்ற அழகான வாழ்க்கை முறையை இல்லாமலாக்குவதற்கு ஷைத்தான் மூன்று விதமான செயல் திட்டங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறான்.
1.துறவரம்.
ஆணுக்கு பெண்ணோ,அல்லது பெண்ணுக்கு ஆணோ தேவையில்லை.ஒருவரை விட்டு ஒருவர் அகன்று கடவுளுக்காகவே நாம் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு திருமணம் முடிக்காமல் பெண்ணை ஆணும்,ஆணைப் பெண்ணும் அனுகாமல் தியானத்தில் இருப்பதற்குப் பெயர் துறவரம் என்று சொல்கிறார்கள்.
இப்படி இருப்பவர்கள் சிறந்தவர்களாகவும்,நல்லவர்களாகவும்,அறிவாளிகளாகவும் மற்ற மக்களை விட ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வித்தியாசப்படுவதாகவும் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மத மக்களாலும் நம்பப்படுகிறார்கள்.
இதே நேரம் யார் திருமணம் செய்து குடும்ப வாழ்;க்கையில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அனைவரும் இவர்களை விட தாழ்வானவர்களாக கருதப் படுகிறார்கள்.
இத்தகையவர்கள் குறைவானவர்கள் இருப்பதினால் இந்தக் கொள்கையின் பாதிப்பு நமக்குத் தெரியவில்லை.இதே நேரம் உலகில் உள்ள அனைவரும் இந்தக் கொள்கையை கையில் எடுத்தால் உலகமே நாசமாகிவிடும் என்பதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் திருமணம் என்ற அமைப்பு இன்றி துரவரம் என்ற நிலைக்கு மணிதன் சென்றால் மனிதன் இணப்பெருக்கம் செய்ய மாட்டான் பிறந்தவன் மாத்திரம் தான்,புதிய படைப்பினம் இருக்காது அதனால் அந்த சொற்பமானவர்கள் மரணித்துவிட்டால் அதன் பின் மனிதன் என்ற இனம் அப்படியே படிப்படியாக அழிந்து போய் விடும்.
இந்த கொள்கையை மற்ற மதங்கள் ஆதரித்தாலும்,இஸ்லாமிய மார்க்கம் மாத்திரம் இதை வண்மையாக கண்டிக்கிறது.
ஆனாலும் நமக்கு முன்னால் கிட்டத்தட்ட இருபது,முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்து நமது முன்னோர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களும் இந்தத் தாக்கத்திற்கு ஆற்பட்டிருக்கிறார்கள்.
தற்காலத்தில் ஏகத்துவ சிந்தனை ஏற்பட்டிருப்பதினால் துறவரத்தை தவறு என்று புரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் அன்றைய காலத்தில் அது சரி என்று நமது முன்னோர்களில் பலர் நினைத்தார்கள்.
அவரை மகான்,அவ்லியா என்றெல்லாம் மக்கள் போற்றினார்கள்.
திருமணத்தை எதிர்த்து,திருமணத்தில் ஈடுபடுவதைப் பாவம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள்.
உதாரணத்திற்கு குணங்குடி மஸ்தானைப் பற்றி நாம் சொல்ல முடியும்.தண்டையார் பேட்டையில் இவருக்கு இன்றும் தர்கா இருக்கிறது.இவரை மக்கள் பெரிய மகானாக அவ்லியாவாக நினைத்து அவரிடம் கோரிக்கை வைத்து வழிபாடும் நடத்தினார்கள் நடத்துகிறார்கள்.
ஆனால் அவரோ கல்யாணத்தை,குடும்பவாழ்கையை கேவலமாக பேசுகிறார் பெண்களை பயங்கரமாக திட்டுகிறார்.
அவருடைய கவிதையை கவணியுங்கள்.
சங்கையும் போக்கி சதிமானமாக சகசன்டியாக்கிவித்திடுவாள் வெகு பங்கப்படுத்தி விட்டிடுவாள்.அந்த மங்கையர் ஆசை வைத்தையையோ வையத்தில் பெண் கொண்ட பேர் கொண்ட பாட்டையும் கேட்டையும் பேசுவோமே நெஞ்சமே!
பெண் என்றால் நமது கண்ணியத்தை இல்லாமலாக்குபவள்,மக்கள் மத்தியில் நமக்கு கெட்ட பெயரை உண்டாக்குபவள் அந்த பெண் மீது ஆசை கொண்டவர்கள் படும் பாட்டைப் பற்றி பேசுவோமா நெஞ்சமே என்று பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திப் பாடுகிறான் இந்த குணங்குடி மஸ்தான்.
இந்தப் பாடல்கள் ஒரு காலத்தில் பள்ளிகளில் வைத்துப் பாடப்பட்டது.
அதே போல்
தங்க நகையும்,முகப்பணிச் சேலையும்,தாவெனவே குரங்காட்டுவாள்.ஆதியைத் தேடி அருள்பட நாடி……………..(இன்னும் பல பாடல்கள் உண்டு)
இப்படி திருமண வாழ்கையை,குடும்ப அமைப்பை சீர்கெடுத்தவர்கள் எப்படி அவ்லியாக்களாக இருக்க முடியும்? ஆனால் ஒரு காலத்தில் இவரெல்லாம் பெரிய அவ்லியாக்கள்.இன்றும் சிலர் இவருக்கு அந்த நிலையை கொடுத்துள்ளார்கள் இஸ்லாத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியை இல்லாமலாக்க முயன்றவர் அவ்லியாகவாக, நல்லவராக, அறிவாளியாக இருக்க முடியுமா?
திருமணத்தை மறுப்பவர் இஸ்லாத்தில் இருக்க முடியாது.
குடும்பவாழ்வை யார் புறக்கணிக்கிறார்களோ,திருமணத்தை யார் வெருக்கிறார்களே அவர்கள் இஸ்லாத்தில் இருக்க முடியாது என நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு)முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்கüல் ஒருவர் (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர் நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன் விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன்; மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (புகாரி - 5063)
நபியவர்களின் வீட்டுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுக்கிறார்கள்.
ஒருவர் தூங்காமல் இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கப் போவதாகவும்,இரண்டாமவர் காலம் பூராகவும் நோன்பு நோற்கப் போவதாகவும்,மூன்றாமவர் திருமணமே முடிப்பதில்லை என்றும் முடிவெடுக்கிறார்கள்.
அப்போது நபியவர்கள் வந்து அதை கண்டித்தது மட்டுமல்லாமல் திருமணம் செய்யாதவர் இஸ்லாத்திலேயே இருக்க முடியாது என்ற தகவலையும் அதில் தெரிவிக்கிறார்கள்.
திருமணம் என்பது இஸ்லாத்தில் முஸ்லிமாக இருப்பதற்குறிய ஒரு அடையாளமாக நபியவர்கள் நமக்கு சொல்லித் தருகிறார்கள்.
ஒரு விதத்தில் இந்த துறவரம் என்பது போலியானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இறைவனுக்காக திருமணத்தை துறப்பதாக சொல்பவர்கள்,இறைவனுக்காக ஆடையை துறந்து நிர்வாண சாமியாக்களாக இருப்பவர்கள்,இறைவனுக்காக சாப்பாட்டை துரந்து சாப்பிடாமலேயே இருக்கிறார்களா என்றால் இல்லை.
ஆசைகளை துறக்க வேண்டும் என்று பேசுபவர்கள் ஏன் சாப்பாட்டைத் துறப்பதில்லை.இதிலிருந்து இந்தத் துறவரம் என்பது பொய்யானது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் செய்யப் படும் ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதை நாம் அறிய முடியும்.
ஆசையை துறப்பாக சொல்பவர்கள் திருமணத்தை வெருப்பதாக சொல்பவர்களால் அதை நிரூபிக்க முடியாது பெண்ணில்லாமல் வாழ முடியாது.அப்படி யாராவது வாழ்தால் அவர்கள் பெண்களை சீண்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கும் அல்லது திருமணம் முடிப்பதற்கான வாய்பு அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும்.
யாரெல்லாம் துறவரம் என்று பேசினார்களோ அப்படிப்பட்ட பலர் பெண்கள் விஷயத்தில் நாறிப்போனதை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்க வில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். (புகாரி - 5071)
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பதிலüக்காமல்) மௌனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகும் நான் முன் போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காவது முறையாக) முன் போலவே நான் கேட்டபோது அபூஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத் தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவேஇ நீங்கள் காயடித்துக்கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான்.) என்று சொன்னார்கள். (புகாரி - 5076)
குடும்ப அமைப்பை சீரழிக்கும் இந்த துறவரத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
தொடரும்..............
0 Comments