அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


* திருச்சி அண்ணா பல்கலையில் MCA,MBA அட்மிஷன்


திருச்சியில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. எம்சிஏ (முழு / பகுதி நேரம்), எம்பிஏ படிப்புகளுக்கு தமிழக அரசின் டான்செட்-2011 நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இப்படிப்புகளில்...
 
 
 
 சேர விண்ணப்பக்கட்டணமாக ரூ.650 (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.350) செலுத்த வேண்டும். கட்டணத்தை ‘The Director (Admissions), Anna University of Technology Tiruchirappalli, Tiruchirappalli 620024'  என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டண சலுகை பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலை இணைக்க வேண்டும்.
www.tau .edu.in/admission என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டான்செட்-2011 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  ‘The Director (Admissions), Anna University of Technology, Tiruchirappalli 620024’ என்ற முகவரிக்கு வரும் மே 31க்குள் அனுப்பவேண்டும். இதர விவரங்களை பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Thanks to Tamil Murasu

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...