டிப்ளமோ‌வி‌ற்கு அதிக வேலைவாய்ப்பு

பி.இ. என‌ப்படு‌ம் பொ‌றி‌யிய‌ல் ப‌ட்ட‌ப்படி‌ப்பு படித்தவர்களை விட டிப்ளமோ படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 354 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் பி.இ, பி.டெக் படித்த பட்டதாரிகளாக வெளி வருகிறார்கள். இது தவிர பல தனியார் பல்கலைக் கழகங்கள் மூலமும் பொ‌றி‌யிய‌ல் படி‌த்து நிறையபேர் பட்டம் பெறுகிறார்கள்.




இவர்களில் 20 சதவீதத்தினருக்குதான் உடனடியாக வேலைகிடைக்கிறது. 30 சதவீதத்தினர் வேலை தேடி பெற்றுக்கொள்கிறார்கள். 20 சதவீதத்தினர் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறார்கள். 30 சதவீதத்தினர் வேலை இ‌ல்லாமலேயே உள்ளனர். இவர்கள் பொ‌றி‌யிய‌ல் படித்து விட்டோமே என்று நினைத்து சிறிய வேலைக்கு செல்லத் தயங்குகிறார்கள். வீட்டிலும் படித்த நமது பிள்ளைகளை என்ன சொல்ல என்று நினைத்து அவர்களது பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க பாலிடெக்னிக் படித்தவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் நிறுவனங்கள், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் உள்பட மொத்தம் 343 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வருடந்தோறும் ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் டிப்ளமோ படித்து முடிக்கிறார்கள்.

கடந்த வருடம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 432 பேர் பாலிடெக்னிக் சேர்ந்து உள்ளனர். ஆனால் மொத்த இடங்கள் 1,13,202 உள்ளன. அந்த இடங்களில் 11 ஆயிரம் இட‌ங்க‌ள் காலியாக கிடந்தன.

டி‌ப்ளமோ படி‌த்தவ‌ர்களு‌க்கு வேலைவாய்ப்பு எப்படி உள்ளது என்று உயர் அதிகாரி ஒருவ‌ரிடம் கேட்டபோது, பாலிடெக்னிக் படிப்பை நடுத்தர மக்கள்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் பி.இ. படிக்கிறார்கள். பாலிடெக்னிக் படிப்பை 18 வயதில் முடிக்கிறார்கள்.

அவர்களில் நன்றாக படிக்கக்கூடியவர்கள் கேம்பஸ் இண்டர்விïவில் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றவர்களுக்கும் வேலை கிடைத்துவிடுகிறது. மிகச்சோம்பேறியாக இருப்பவர்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதில்லை.

மெக்கானிக் படித்தவர்களில் பி.இ. படித்தவர்களை விட பாலிடெக்னிக் படித்தவர்களையே பல கம்பெனிகள் விரும்புகின்றன. காரணம் வயதிலும் குறைந்தவர்கள். பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்கள். அதன் காரணமாக கடினமாக உழைக்கும் தன்மை கொண்டவர்களாக உள்ளனர். அதனால் அவர்களை வேலைக்கு வைக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. அதேப்போல தான் சிவில், இ.சி.இ., படித்தவர்களிலும் டிப்ளமோ படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. எனவே டிப்ளமோ படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது எ‌ன்று அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments