அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இஸ்லாம் கூறும் குடும்பவியல்

(தொடர் 02)
(தமிழுலகின் சிறந்த பேச்சாளரும்எழுத்தாளருமான சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த ரமழான் மாதம் முழுவதும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் பேசிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவை எழுத்தில் தரும்படி பலரும் வேண்டிக் கொண்டதால் காலத்தின் தேவை கருதி தொடராக தருகிறோம்)  

2.கட்டுப்பாடற்ற உறவு.
 
 
குடும்ப அமைப்பை சீரழிக்கும் சித்தாந்தங்களில் இரண்டாவது இடம் இதற்குத்தான் இருக்கிறது. நான் யாரோடு வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க்க முடியாது என்ற இந்தக் கோட்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

யார் யாரோடு வேண்டுமானாலும் உறவு வைக்க முடியும் என்றால் குடும்பம் என்றொன்று இல்லாமல் போகிறது. கணவன் மனைவி என்ற உறவு முறை இல்லாமல் போகும். நிலைமை இப்படியானால் குழந்தையை யார் வளர்ப்பது பிறந்த குழந்தைக்கு தந்தை யார்? என்ற பலவிதமான கேள்விகளும் அங்கு எழும்.

இப்படிப்பட்ட சமுதாயத்தை சீர்குலைக்கக் கூடிய சித்தாந்தங்கள் இன்று நம் மத்தியில் பலமாக விதைக்கப்படுகின்றன.

அறிஞர்கள், நீதிமான்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் கூட இன்று இந்த சித்தாந்தத்தை ஆதரிப்பதைப் பார்க்க முடியும்.

எந்த ஒரு பொறுப்பும் அற்ற வாழ்க்கை வாழ வேண்டும் யாரும் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே இவர்களின் எண்ணக் கருவாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு மணைவி, ஆறு மாதங்களுக்கு மணைவி என்று ஒப்பந்தத் திருமணங்கள் கூட இன்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதற்கு காரணம் இதுதான்.

இது போன்ற கருத்துக்களை பல நடிகைகள் கூட பேசிய நேரத்தில் சில சமுதாய அக்கரை கொண்டவர்கள் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நேரத்தில் நீதி மன்றமே இதுவொரு பிரச்சினை இல்லை என்றும் இது சுதந்திரமானது என்றும் இப்படிப்பட்ட செயல்பாடுகளை தடுப்பதற்கு எந்த ஒரு சட்டமும் நமது நாட்டில் இல்லையென்றும் கூறிவிட்டதைப் பார்த்தோம்.

இப்படிப்பட்ட கேடு கெட்ட சட்டங்கள் எல்லாம் நாட்டில் அனுமதிக்கப்பட்டால் நிலைமை எப்படியாகும் என்பது நாம் அறிந்ததே!  இதனால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்.

யாரோடு வேண்டுமானாலும் நாம் உறவு கொள்ள முடியும் என்ற கொள்கையை கொண்டவர்களினால் இன்று உலகில் பலவிதமான பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. அதில் முதலாவது இடம் வகிக்கும் பிரச்சினைதான் எயிட்ஸ் என்ற கொடிய நோயாகும்.

இந்த நோய் ஏற்பட்டால் குறிப்பிட்ட சில வருடங்களில் உயிருக்கே ஆபத்து வந்துவிடுவதை பார்க்கிறோம்.

இரண்டு வருடம் அல்லது ஐந்து வருடம் அதிக பட்சமாக 10 வருடங்கள் தான் அவனுடைய உயிர் வாழ்க்கை என்று இன்றைய மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. நோய் எதிர்ப்பு சக்கிகள் குறைந்து இருதியில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு இந்த நோய் மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.

எந்த நோயானாலும் வரும் போகும் ஆனால் இந்த எயிட்ஸ் நோய் மாத்திரம் வந்தால் போகாது நோய் எதிர்பு சக்கியையை இல்லாமல் ஆக்கிவிடும் அளவுக்கு பயங்கரமானதாகும்.

இந்த எயிட்ஸ் ஏற்படுவதற்கான காணரம் இரண்டாகும்.

ஒரு பெண் அதிகமான ஆண்களுடன் உறவு வைக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. (இந்த நோய் அதிகமாக பெண்களுக்குத் தான் தொற்றுகிறது)

ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் நாட்டில் ஒரு விளம்பரம் செய்வார்கள் இந்த விளம்பரமே தவறானது ஒருவனுக்கு ஒருத்தியல்ல ஒருத்திக்குத்தான் ஒருவன். ஒருத்திக்கு ஒருவன் என்பதை ஒருவனுக்கு ஒருத்தி என்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

அரபு நாடுகளில் ஒருவன் 4 மனைவிமார்களை வைத்துக் கொண்டு இருப்பான் ஆனால் அதனால் எந்த நோயும் தொற்றவில்லை. இதே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களுடன் கூடும் போது பல வகையான நோய்கள் தொற்று ஏற்படுகிறது.

மேற்கு நாடுகளில் எல்லாம் தற்போது பாதுகாப்பான உறவு என்ற பெயரில் ஆணுரை போன்றவற்றைப் பயண்படுத்தி இந்த எயிட்சை கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அதனைக் குறைக்க முடியவில்லை.

உலகிலேயே அதிகமாக எயிட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபிரிக்காவில் இருக்கிறார்கள் அதற்கு அடுத்த இடம் இந்தியாவிற்கும் இந்தியாவில் அதிகமாக எயிட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ப்ரீ செக்ஸின் பாதிப்பு இந்த மாநிலத்தில் தலை தூக்கியுள்ளது.

இப்படிப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாடே நாச்காடாகிவிடும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

3. முறை கேடான உறவு.

உலகில் வாழும் காலத்தில் மனிதன் தனது உடல் உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் படைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இதைத் தாண்டி இன்று பலர் ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் என்ற ஓரினச் சேர்க்கை முறையை சரி கண்டு வருகிறார்கள்.

இதற்காக பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் இந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டத்தின் மூலம் அனுமதியும் கொடுத்துவிட்டது.

இந்த நிலை உலகம் முழுவதும் உருவானால் நிலைமை எவ்வாறு இருக்கும்?

இப்படிப்பட்ட மானங்கெட்ட முறைகளைக் கையான்டு தங்கள் உணர்வுகளை தீர்த்துக் கொள்பவர்களின் இறுதி கட்டத்தைப் பார்த்தால் தனது தள்ளாத வயதில் தனக்க கஞ்சி ஊற்றுவதற்குக் கூட வாரிசு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் என்ற நிலை உருவானால் எப்படி வாரிசுகள் கிடைக்கும்? வாரிசுகள் இல்லாவர்களின் இறுதி நிலை தன்னை கவணிக்கக் கூட யாரும் அற்ற அநாதையாகவே அவன் ஆகிவிடுவான்.

ஒருவன் திருமணம் செய்திருந்தால் அவனுக்கு அவன் மணைவி இறுதி நேரத்தில் கூட துணையாக இருப்பால் ஆனால் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற நிலையில் இருக்கும் யாருக்கும் இறுதி நேரத்தில் இப்படிப்பட்ட துணைகள் கிடைப்பதில்லை. கிடைக்கவும் மாட்டாது. இதுதான் நிதர்சனமான உண்மையாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட இழிந்த காரியத்தில் ஈடுபட்டதற்காக ஒரு சமுதாயத்தையே அல்லாஹ் அழித்திருக்கிறான் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது.

நபி லூத் அவர்களின் சமுதாயம் தான் இப்படி அழிக்கப்பட்டவர்கள். இவர்கள் தான் முதன் முதலில் இந்த இழிந்த செயல்பாட்டில் மூழ்கிய சமுதாயத்தவர்கள். அந்த முதல் சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டான்.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்? என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். (அல் குர்ஆன் 7 - 80)

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள் (என்றும் கூறினார்) (அல் குர்ஆன் 7 - 81)

உலகிலேயே இந்த இழி செயலை செய்தவர்களில் முதல் கூட்டம் இவர்கள் தான். இதற்காகத் தான் அந்தக் கூட்டத்தையே இறைவன் அழித்ததாக தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

நமது கட்டளை வந்த போது அவ்வுரின் மீது சுடப்பட்ட கட்களால் கல் மழை பொழிந்து அதன் மேல் பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.(அல் குர்ஆன் 11-82)

இந்த ஓரிணச் சேர்க்கை மற்றும் கட்டுப்பாடு அற்ற உறவு ஆகியவை எயிட்சுக்கு காரணம் என்று இன்று கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த இரண்டு முறைகளில் தான் எயிட்ஸ் உருவாகிறது (எயிட்ஸ் தொற்று பல விதங்களில் உண்டாகிறது) என்பதை நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆக முஸ்லீம்களாகிய நாம் எந்தக் காரணம் கொண்டும் திருமணத்தை வெறுப்பதாக சொல்லிக் கொள்ளும் துறவரத்தை ஆதரிக்கக் கூடாது.

அதே போல் ப்ரீ செக்ஸ் என்ற கட்டுப்பாடற்ற உறவு முறைக்கு எதிராக கடுமையான நிலைபாடுகளை எடுப்பதோடு பேசவும் வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் ஓரிணச் சேர்க்கைக்கு துணையாக இருந்துவிடக் கூடாது.

இந்தக் காரணங்கள் அணைத்தும் குடும்பத்தின் நல்லொழுக்கத்தை சீர் குலைப்பதுடன், குடும்ப வாழ்வையே நாசப்படுத்தும் செயல்பாடுகளுமாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…………………….

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...