அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பகிடிவதையின் வகைகளும், பாதிப்புக்களும். பல்கலைக்கழக வாழ்வை நாசப்படுத்தும் பகிடிவதை
 (Ragging) கொடுமைகள். (தொடர் 02)

உயிர் பாதிப்புக்களை உண்டாக்கி, படிப்பை இடை நிறுத்தம் செய்து, உடல் ஊனம் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகி உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து ஓடும் அளவுக்கு அதிக பாதிப்புக்களை இந்த பகிடிவதைப் கொடுமை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

எவ்வளவு துன்பங்கள், உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் இந்த ரேகிங் கொடுமை நின்றபாடில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிப் பாசரை, போலிஸ், இராணுவ பயிற்சி மையம் என்று எல்லாத் துறைகளிலும் பெரும்பாலும் மூன்று வகையிலான பகிடிவதை (Ragging) கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.
உடலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)
உளவியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)
பாலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)

நாம் இந்த மூன்று வகையான பகிடிவதைத் தொல்லை தொடர்பாக தனித்தனியாக பார்ப்போம்.

உடலியல் ரீதியிலான பகிடிவதை. (Ragging)


எதிர்காலக் கணவை நனவாக்க எண்ணி பல்கலைக் கழகம் நுழையும் மாணவர்களில் அதிகமானவர்கள் பகிடிவதை (Ragging) என்ற பெயரில் உடலியல் ரீதியிலான பலவிதமான துன்பங்களை சந்திக்கிறார்கள்.

புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் என்ற தங்கள் நிலையை நிலை நிறுத்திக் கொள்வதற்காக வேண்டி கடுமையான முறையில் தண்டித்தல்.

உடல் பயிற்சி என்ற பெயரில் கடுமையான பயிற்சிகளை கொடுத்து கஷ்டப்படுத்துதல்.

வெயிலில் நிற்க வைத்தல் (இதன் போது சிலர் மயங்கிவிடுவர்)

தனிமையில் வைத்துத் துன்புறுத்துதல்.

மைதானத்தில் முட்டுக்காலினால் நடக்க வைத்தில்.

மாணவர்களின் பின் பகுதியை சுடு மணலில் வைத்து சுற்றச் செய்தல்.

தலை கீழாக நிற்க வைத்தல்.

கழிவறைகளில் தலை கீழாக நிற்க்க வைத்தல்.

நீரை அல்லது பானங்களை கொடுத்து அளவுக்கதிகமாக பருக வைத்தல்.

மிளகாய் போன்ற காரமானவைகளை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தல்.

நீர்த் தொட்டியில் மாணவர்களை தூக்கி எறிதல் அல்லது மிகக் குளிர்ந்த நீரை மாணவர்களின் மேல் ஊற்றுதல்.

மிருகங்களைப் போல் நடத்தை செய்து காட்டுமாறு பணித்தல். மீனைப் போல் தரையில் நீந்தும் படியும், முயலைப் போல் துள்ளும் படியும், குரங்கைப் போல் பாயும்படியும் கட்டாயப்படுத்துதல்.

மார்பகத்தில் பற்பசையைத் தடவி ஒருவரை ஒருவர் நக்கவிடுதல்.

தலை முடி, தாடி முடி, மீசை முடி போன்றவற்றை பிடுங்குதல். மொட்டையடித்தல்.

தங்கள் இரத்தத்தை தம்மையே எடுக்கச் சொல்லி இரத்தத்தினால் தங்கள் பெயரை எழுதச் சொல்லுதல்.

கழிவறை நீரை எடுத்து வரச் செய்து அதனை மாணவர்களுக்கு அருந்தும் படி கட்டாயப்படுத்துதல்.

இது போன்ற இன்னும் பலவிதமான உடலியல் ரீதியிலான பகிடிவதைத் தொல்லைகள் பல்கலைக் கழகங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

உளவியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)

சமுதாய வழக்கில பரவிக் கிடக்கும் மிக மோசமான, அசிங்கமான வார்த்தைகளை கூறி அவற்றை வைத்துப் பாட்டுப்பாடப் பணித்தல். வசனம் அமைத்து மோசமான முறையில் பேசும்படி கட்டாயப்படுத்துதல்.

கீழ்த்தரமான வாசகங்களினால் மாணவர்களை திட்டுதல்.

பட்டப் பெயர் சூட்டுதல்.

தங்களைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோர்களை இழிவு படுத்திப் பேசுமாறு பணித்தல். சகோதர சகோதரிகளை வர்ணித்துப் பேசும்படி கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்துதல்.

தன்னையே குறைப்படுத்திப் பேசுமாறு குறிப்பிட்ட மாணவனையே பணித்தல்.

மனதை நோகடிக்கச் செய்யும் விதத்தில் பேசுதல்.

சக மாணவ, மாணவியருக்கு முன்பு கேவலப்படுத்துதல்.

பாலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)

படிப்பதற்காக பல்கலைக் கழகம் நுழையும் மாணவர்களின் பலர் பாலியல் ரீதியிலான பகிடிவதைத் தொல்லைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.

தனக்கு மேல் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மத்தியில் நிர்வாணப்படுத்துதல்.

தனிமையில் அல்லது சக தோழர்களுக்கு மத்தியில் வைத்து பாலியல் தொடர்பான செயல்களை செய்து காட்டச் சொல்லுதல்.

பாலுறுப்புக்களில் காரமான பொருட்களை இட்டு வேதனைப் படுத்துதல்.

சில நேரங்களில் மேல் வகுப்பு மாணவர்கள் புதிய மாணவர்களை பலாத்காரம் செய்து தங்கள் உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்ளுதல்.

1992ல் டாக்டர் பண்டார (இலங்கை) என்பவர் பகிடிவதை தொடர்பாக செய்த ஆராய்ச்சியில் மேற்கண்ட பாதிப்புகள் நிகழ்வதாக கண்டறிந்துள்ளார்.

அவருடைய ஆராய்ச்சியில் மேலும் தெரியவருவதாவது.......

தான் ஆய்வுக்குட்படுத்திய மாணவர்களில் 60 சதவீதமானவர்கள் உளவியில் ரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

30 சதவீதமானவர்கள் உடல் ரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கல்வியல் 13 சதவீதமானவர்கள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இது டாக்டர் பண்டார (இலங்கை) அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வரும் உண்மையாகும். (நன்றி : சகோதரர் யஹ்யா ஷரீப்)

அடுத்த தொடரில் பகிடிவதையில் பாதிப்பினால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றிய செய்திகளுடன் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...