அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


வீடியோவை நீக்க முடியாது, தனிப்பட்ட நபரின் கருத்துரிமையை பரிப்பது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது! – ஹிலாரி கிளின்டன்!


நேற்று (13-9-2012) வாஷிங்டன்னில் U.S.-Morocco உரையாடல் நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் 16 நிமிடங்கள் பேசியுள்ளார்.
நபிகள் நாயகத்தை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியான திரைப்படத்தினால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் கொந்தளித்துபோயிருக்கும் நிலையில் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்யும் விதமாகவும், அமெரிக்க அரசு எந்த அளவிற்கு முஸ்லிம் விரோத போக்கை மேற் கொள்கின்றது என்தை உணர்த்தும் விதமாகவும் தனது உரையில் ஹிலாரி பேசியுள்ளார்.
அவர் தனது பேச்சில்,
நாடு முழுவதும் முஸ்லிம்களின் போராட்டத்திற்கு காரணமான  வீடியோவை அமெரிக்க அரசு செய்ய ஒன்றும் முடியாது. தொழில் நுட்பம் வளர்ந்த இந்த  காலத்தில் அதை நீக்குவது சாத்தியமல்ல.  அப்படியே சாத்தியம் என்றாலும் தனிப்பட்ட நபரின் கருத்துரிமையை பரிப்பது நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. தனிப்பட்ட நபர் தனது கருத்தை  வெளிப்படுத்துவதை தடுக்க முடியாது.
நான் இவ்வாறு கூறியதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் வேறு வழியில்லை.
எனது தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறிய ஹிலாரி, பேச்சின் ஆரம்பத்தில், அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் அந்த வீடியோவை நான் பார்த்தில் ”வீடியோ வெறுக்க தக்கதாகவும் கண்டிக்கதக்கதாகவும்” உள்ளது எனக் கூறியுள்ளார்.
வேறு மதத்தில் இருக்கும் நம்மாலே இந்த வீடியோவை ஜீரணிக்க முடியவில்லையே வெருப்பு வருகின்றதே கண்டிக்க வேண்டும் என்று கோபம் ஏற்படுகின்றதே, முஹம்மு நபியை உயிரினும் மேலாக மதிக்கும் இதை பார்த்த முஸ்லிம்கள் எப்படி சும்மா இருப்பார்கள்? என்ற அடிப்படை அறிவு வேண்டாம் இந்த அமெரிக்க பிரதிநிதி கிளிண்டனக்கு.
தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்களாம் ஆனால் அரசாங்கம் ரீதியாக அந்த வீடியோவை பேச்சுரிமை, கருத்துரிமை என்பார்களாம்.
ஆங்கில செய்தி ஊடங்கள் ஹலாரியின் பேச்சில் ”வீடியோ கண்டிக்கதக்கது” எனக் கூறியதை தான் வெளியிடுகின்றது.
”கண்டிக்கதக்க வீடியோ” வை நீக்க முடியாது எனக் ஹிலாரி கூறியதை மறைத்து செய்தி வெளியிடுகின்றனர்.
வீடியோவையே ஒன்னும் செய்ய முடியாது எனக் அமெரிக்க அரசு கூறியதிலிருந்து நபிககள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் படத்தை தயாரித்தவனை ஒன்னும் செய்யப் பொவதில்லை என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்னவெனில் ”அந்த கிரகத்திற்கு சென்று விட்டோம் இந்த கிரகத்திற்கு சென்று விட்டோம், ஆளில்லாத விண்கலத்தை வெற்றிகரமாக இரக்கிவிட்டோம்” என பில்டப் விடும் அமெரிக்க வல்லரசு ஒரு வீடியோவை நீக்குவது சாத்தியமல்ல எனக் கூறியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் அந்த ஒரு தமிழ் படம் வெளியிடப்பட்டது. உடனே அப்போதைய முதல் கலைஞர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு  இந்த வீடியோ இணையதளத்திலிருந்து முற்றிலுமாக உடனடியாக நீக்கப்பட்டது.
வயதான கலைஞரால் முடிந்தது வல்லரசானா அமெரிக்காவால் முடியாதாம்.  கேக்குறவன் கேனயன்னா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்வாங்கலாம்.
ஹிலாரி பேசிய வீடியோ:

ஹிலாரி பேசியுள்ள முழு உரையின் script வடிவம்:
யமனில் நேற்று போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...