S.I.R பூர்த்தி செய்யும் முகாமிற்கு கீழக்கரை தாசில்தார் வருகை .

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 S.I.R பூர்த்தி செய்யும் முகாமிற்கு கீழக்கரை தாசில்தார் வருகை .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பள்ளிக்கு அருகாமையில் எஸ் ஐ ஆர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது இதில் மூன்று பகுதிக்குரிய பி எல் ஓ அதிகாரிகளும் அவர்களுடைய சூப்பர்வைசர் அவர்களும் இந்த முகாமில் முழுமையாக கலந்து கொண்டு நமக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு நல்கினார்கள் இந்த முகாம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக கீழக்கரை தாசில்தார் அவர்கள் வருகை தந்து நம்முடைய விண்ணப்ப படிவத்தை பார்த்து சரியாக பூர்த்தி செய்து கொடுக்கின்றீர்கள் என்றும் இது போன்ற பணிகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்று நமக்கு ஆர்வத்தை அளித்தார்கள்.
 மேலும் நாம் ஏற்படுத்தியிருக்கும் அந்த வழிமுறையை பார்த்து நம்மை பாராட்டி கைகுலுக்கி சென்றார்கள்.

மேலும் தாசில்தார் அவரிடம் நாம் ஏற்படுத்தி இருக்கும் அந்த நிகழ்ச்சியுடைய விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்தோம் மக்கள் பார்வைக்காக மக்கள் கொண்டு வரக்கூடிய ஆவணங்களின் பேனர்கள் மற்றும் WHATSAPP மூலமாக ஜாபிதா அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்பு பேனர்கள் அனைத்தையும் பார்த்து அதை போட்டோவாக எடுத்துவிட்டு சென்றார்கள்.

இதில் நம்முடைய ஜமாத் S .I.R சம்பந்தமான விழிப்புணர் நோட்டீசை தாசில்தார் அவர்களுக்கு வழங்கினோம்.

 அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

0 Comments