மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும்.


"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்" என்ற பல மொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும்.

கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.

ஏன் என்றால் இன்று பல வீடுகளில் கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.
 

உங்கள் அம்மா இப்படி, உங்கள் தாய் அப்படி என்று ஒரு நாளைக்கு நூறு தடவைகள் கணவனின் தாயைப்பற்றி – மாமியாரைப் பற்றி மருமகள் தனது கணவனிடத்தில் புகார் சொல்லுவார்.

இந்தப் பிரச்சினை பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.

காரணம் மாமியார் பணிவிடை பற்றி மருமகளுக்கு சரியாகத் தெரியவில்லை என்பதே!

நான் என் கணவருக்கு மாத்திரம் தான் உதவ வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும். அதுவல்லாத யாருக்கும் நான் எந்தப் பணிவிடையும் செய்யும் அவசியம் இல்லை. செய்யவும் மாட்டேன் என்று விடாப்பிடியாக சில மருமகள்கள் இருக்கிறார்கள். இதற்க்குக் காரணம் இவர்கள் சரியான கோணத்தில் இஸ்லாத்தின் குடும்ப இயலைப் புரிந்து கொள்ளாததே.

பெண்கள் என்றால் போதைக்குறியவர்கள் என்று பார்க்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கும் ஆண்மா உண்டு, அவர்களும் மனிதப் பிறவிதான் என்பதை உலகுக்கு உணர்த்தியது இஸ்லாம். பெண்களுக்கு இவ்வளவு கவுரவத்தையும், மரியாதையையும் தந்த இந்த மார்க்கத்தில் பிறந்த பெண்கள் தங்கள் பாலாராகிய மாமியாரை மதிக்காமல், பணிவிடைகள் செய்யாமல் அவர்களை வெறுத்து ஒதுக்குவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத படுபாதகச் செயல்பாடாகும்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.(2:228) இந்த வசனம் மருமகளுக்கு மாத்திரம் உரியதன்று உண்மையில் அணைத்துப் பெண்களுக்கும் உரிய உரிமைகள் பற்றிப் பேசும் வசனமாகும்.

பெண்கள் தங்கள் கடமைகள் எது உரிமைகள் எது என்பதை சரியாக விளங்கிக் கொண்டால்தான் மிகச் சரியான இன்பகரமான முறையில் தங்கள் வாழ்க்கைகளை அமைத்துக் கொள்ள முடியும். கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெண்ணினம் இருந்ததை விட பல மடங்கு முன்னேறியதாகத் தான் தற்காலத்தில் இருக்கிறார்கள்.

கல்வியில், அறிவியலில், நாகரீகப் பண்பாட்டில் என்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் இன்றும் பத்திரிக்கையைப் புரட்டிப்பார்க்கும் போது மாமியார் மருமகள் பிரச்சினைகள் வெட்டுக் குத்துக்கள், குடும்பப் பிழவுகள் பற்றி பல செய்திகள் வந்த வண்ணமிருப்பதைப் பார்க்களாம். இதற்கான காரணம் என்ன? மாமியார் மருமகள் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு மத்தியில் ஏற்படவில்லை. விட்டுக் கொடுப்பு சகிப்புத் தன்மை பற்றிய அறவுரைகள் அவர்களை சரியாக செம்மைப்படுத்தவில்லை. ஆக முதலில் மாமியார் மருமகள் உறவு செம்மைப்படுத்தப்பட வேண்டும். குர்ஆனும் நபிமொழிகளும் சொல்லித் தரும் குடும்ப இயல் சரியான முறையில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும்.

குணவதியே கணவனின் காவலாளி.

கணவனுக்குறிய சொத்துக்கள், அவனுடைய குழந்தைகள், அவனுடைய வீட்டு நிலைபாடுகள் அனைத்துக்கும் பொருப்பாளியாக இஸ்லாம் மணைவியைத் தான் சொல்லித் தருகிறது.

ஒருவன் திருமணம் செய்யாத வரை அவனுடைய செல்வத்திற்கு, செயல்பாட்டிற்கு அனைத்திற்கும் அவனே பொருப்பாளியாக இருக்கிறான். என்றைக்கு அவன் ஓர் ஆடவன் என்ற எல்லையைத் தாண்டி கணவன் என்ற நிலையை அடைகிறானோ அன்றைக்கே அவனுடைய மணைவிக்கு இவனுடைய அனைத்துப் பொருப்புக்களும் கை மாறுகிறது.

கணவனுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் மணைவியும் உரிமை படைத்தவளாக மாறிவிடுகிறாள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும், அவன் குழந்தைகளுக்கும் பொருப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். (நூல் : புகாரி - 2554)  

கணவனின் வீட்டிற்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் மணைவிதான் பொருப்பானவள் என்றும் அந்தப் பொருப்புகள் பற்றிய கேள்வி கணக்கு மறுமையில் கண்டிப்பாக உண்டு என்பதையும் மேற்கண்ட செய்தியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

மணைவி என்பவள் தன்னுடைய மாமியாருக்கு மாத்திமல்ல, தேவையேற்பட்டால் மாமனாருக்கு, கணவனின் சகோதர சகோதரிகளுக்கும் உதவி ஒத்தாசைகள் பணிவிடைகள் செய்வதற்கு உரியவளாகிறாள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே ! நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் நபியவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிறமாக செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம் “நீ கண்ணிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் “வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் திருமணம் முடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள் “கண்ணிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உண்ணுடனும் விளையாடலாமே!” என்று கூறினார்கள். 

நான் “அல்லாஹ்வின் தூதரே ! எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என்எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொள்ளப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ அவர்களை பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும், அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன். 
(நூல் : புகாரி - 2967)

மேற்கண்ட செய்தியில் கண்ணிப் பெண்ணை திருமணம் செய்திருக்களாமே என்று நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழரிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிறு வயதுடைய தனது சகோதரிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே தான் ஒரு வாழ்ந்த அனுபவமுள்ள விதவைப் பெண்ணை மணந்ததாகச் சொல்கிறார்கள் அதை நபியவர்களும் ஆமோதிக்கிறார்கள்.

இன்னுமோர் செய்தியில் ஜாபிர் அவர்களைப் பார்த்து நீங்கள் செய்தது சரிதான் என்று ஊக்கமளிக்கும் விதமாகவும் நபியவர்கள் பேசுகிறார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாரு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் “நீ செய்தது சரிதான்” என்று கூறினார்கள். (நூல் : புகாரி - 4052)

சகோதரிகளுக்கு உதவ வேண்டுமென்பதையே நபியவர்கள் ஆமோதித்து அங்கீகரிக்கும் போது மாமியார் என்பவர்கள் சகோதரிகளை விட முற்படுத்தப் பட வேண்டியவர்கள் அதனால் அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வது அல்லது பணிவிடைகள் செய்வது என்பது மிக முக்கியமான அதிகம் சிறப்புடைய ஒரு செயல்பாடுதான் என்பதை மிகத் தெளிவாக நாம் மேற்கண்ட செய்தியில் இருந்து புரிந்து கொள்கிறோம்.

அது மாத்திரமன்றி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தான் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை சொன்னவுடன் அது சரியானது தான் என்றும் நபியவர்கள் ஊக்கமளித்து பதில் சொல்கிறார்கள்.

ஆக அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே ! மாமியார் பணிவிடை என்பது இஸ்லாம் அங்கீகரித்த ஒரு செயல்பாடு என்பது மட்டுமன்றி அதன் மூலம் கணவனின் கடமைகளை சரிவர செய்தவள் என்ற இடத்தை அடைந்து கொள்வதற்கும் அது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இங்கு சொல்லப்படுகிறது.

கணவனின் பெற்றோரை மதித்து, மாமி மருமகள் என்ற பிரச்சினைகளை மறந்து உண்மையான ஒரு முஸ்லீம் பெண்மணியாக சிறந்த குணவதியாக, மாமியாரையும் நமது தாயாராக மதித்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!

Post a Comment

1 Comments

Anonymous said…
Good Article